நிதி அமைச்சகம்
ஹிமாச்சல் பிரதேசத்தில் குடிநீர் விநியோகம், சுகாதார சேவைகளை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி 96.3 மில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானது
Posted On:
22 AUG 2022 4:38PM by PIB Chennai
ஹிமாச்சல் பிரதேசத்தில் குடிநீர் விநியோகம், சுகாதார சேவைகளை மேம்படுத்த 96.3 மில்லியன் டாலர் கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி – இந்திய அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய அரசின் சார்பில் பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலர் திரு. ரஜத் குமார் மிஷ்ரா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் சார்பில் அதன் இந்திய இயக்குனர் திரு. டேகியோ கோனிஷி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீட்டிற்கும் பாதுகாப்பான குழாய் இணைப்பு குடிநீர் வழங்கும் இந்திய அரசின் ஜல் ஜீவன் இயக்கத்தின் கனவை நிறைவேற்றுவதாக உள்ளது என்று கூடுதல் செயலர் திரு. ரஜத் குமார் மிஷ்ரா தெரிவித்தார்.
இந்த திட்டம் ஹிமாச்சலப் பிரதேச அரசின் ஜல் சக்தி விபாக் மற்றும் கிராமப் பஞ்சாயத்து, உள்ளூர் தண்ணீர் குழுக்களின் தேவையை பூர்த்தி செய்யும். இதன் மூலம் 75800 குடும்பங்கள் பயன் பெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853605
------
(Release ID: 1853682)
Visitor Counter : 169