மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆஸ்திரேலியாவில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான இணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவுக்கான வாய்ப்பை ஆராய திரு தர்மேந்திர பிரதான் நான்கு நாள் பயணம்

Posted On: 20 AUG 2022 5:10PM by PIB Chennai

மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இந்திய-ஆஸ்திரேலிய உறவுகளை வலுப்படுத்தவும், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் உள்ள இணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு அம்சத்தை ஆராயவும் நான்கு நாள் பயணமாக ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ளார்.

பயணத்துக்கு முன்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் கல்வித் துறையில் சீர்திருத்தங்கள், இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு உறவுகளில் புதுப்பிக்கப்பட்ட வீரியம் ஆகியவை நமது ஒத்துழைப்பின் முக்கிய தூணாக அறிவுப் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு இருதரப்புக்கும் அபரிமிதமான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார். இந்த சுற்றுப்பயணம் நமது நோக்கத்தின் ஒற்றுமைக்கு வேகம் சேர்க்கும், நாடுகடந்த அறிவுப் பாலங்களை உருவாக்க உதவும், கற்றல், திறன், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு ஆகிய அனைத்துத் துறைகளிலும் நமது ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமது 4 நாள் பயணத்தின் போது, ஆகஸ்ட் 21 ஆம் தேதி, அமைச்சர் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாடுகிறார். அடுத்த நாள், திரு  பிரதான் மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார்.  மேலும் திரு பிரதான்,  சிட்னியில் உள்ள TAFE NSF மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்வார். அங்கு அவர் துணைவேந்தர்கள் மற்றும் ஆஸ்திரேலிய அரசின் கல்வித் துறையின் மூத்த பிரதிநிதிகளுடன் உரையாடுவார்.

ஆகஸ்ட் 23, 2022 அன்று, அமைச்சர் மெல்போர்னில் உள்ள கங்கன் இன்ஸ்டிடியூட் மற்றும் டீக்கின் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அவர் கல்வியாளர்கள் மற்றும் ஆஸ்திரேலிய கல்வி மற்றும் திறன் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர்கள் மற்றும் மெல்போர்னில் வசிக்கும் துடிப்பான இந்திய புலம்பெயர்ந்தோரை அவர் சந்திப்பார். அடுத்த நாள், வெற்றிகரமான ஆஸ்திரேலியா-இந்தியா ஆராய்ச்சி ஒத்துழைப்பை உருவாக்குவது குறித்து திரு பிரதான் எட்டு குழுவுடன் உரையாடல் நடத்துவார். ஆஸ்திரேலியா இந்திய வர்த்தக சபை மற்றும் மோனாஷ் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யவுள்ள நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வார்.

 ***************


(Release ID: 1853337) Visitor Counter : 128