கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய துறைமுகங்கள் சட்ட முன்வடிவு குறித்து கருத்துகள் அனுப்பலாம்

Posted On: 18 AUG 2022 4:34PM by PIB Chennai

இந்தியா 7500 கி. மீ. நீள கடற்கரையை கொண்டுள்ளது. 95 % இந்திய வர்த்தகம் நீர்வழி போக்குவரத்து மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாகர்மாலா திட்டத்தின் படி மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை சார்பில் துறைமுகங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்திய துறைமுக சட்டம் - 1908 நூறாண்டு பழமை வாய்ந்தது. இந்தியாவின் வெளியுறவு கொள்கை, சுற்றுசூழல் நடவடிக்கைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது. இதன்பொருட்டு இந்திய துறைமுக சட்டம் 2022 வரைவு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த சட்ட வரைவு மத்திய - மாநில உறவை மேம்படுத்துதல், சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் இந்தியாவின் கடமைகளை ஒருங்கிணைத்து, இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுகங்கள் மாசுபடுத்தும் நடவடிக்கைகளைத் தடுப்பதை உறுதி செய்தல், எளிய வர்த்தகத்தை உறுதி செய்தல் ஆகிய பல்வேறு முக்கிய அம்சங்களை இந்திய துறைமுக மசோதா கொண்டுள்ளது.

இந்த சட்ட முன்வடிவு குறித்த கருத்துகள்/ பரிந்துரைகளை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://shipmin.gov.in/ and https://sagarmala.gov.in/ என்ற இணைப்பின் மூலம் சட்ட முன்வடிவை அணுகலாம். பரிந்துரைகளை sagar.mala[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளடு.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1852874

***************


(Release ID: 1852938) Visitor Counter : 272