கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு நாடுகளுக்குப் பயணம்

Posted On: 18 AUG 2022 4:02PM by PIB Chennai

மத்திய  துறைமுகம், கப்பல் மற்றும் நீர் வழிகள் மற்றும் ஆயுஷ் துறை  அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் அரசு முறைப் பயணமாக  ஈரான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இன்று புறப்பட்டார். இந்த, பயணத்தின் போது, ஈரானின் சபாகரில் உள்ள  ஷாகித் பெகஸ்தி துறைமுகம், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ஜபல் அலி துறைமுகம்  ஆகியவற்றை பார்வையிட உள்ளார்.

இந்தியா சார்பில் வெளிநாட்டில் உருவாகும் முதல் துறைமுகமாக சபாகர் உள்ளது.

பெருந்தொற்று காலத்தில் இந்தியா- ஈரான் இடையேயான இருதரப்பு பயணம் குறைவாகவே இருந்தது. அமைச்சரின் அரசு முறைப் பயணம் இரு நாடுகளுக்கிடையேயான கடல் சார் உறவை மேலும் வலுப்படுத்தும். மேலும் ஐரோப்பா, ரஷ்யா மற்றும் காமன்வெல்த் நாடுகளுடனான இந்திய வர்த்தகத்தின் நுழைவு வாயிலாக சபாகர் துறைமுகம் விளங்கும் என்பதை இந்தப் பயணம் எடுத்துரைக்கும்.மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்  ஈரான் நாட்டின் சாலை & நகர்ப்புற வளர்ச்சி, சுகாதாரம் & மருத்துவக்கல்வித்துறை அமைச்சர்களை சந்தித்து பேசவுள்ளார்.  மேலும் மாலுமிகள் தகுதி சான்றளிப்பு தொடர்பாக, இந்தியா-ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1852866

 

***************


(Release ID: 1852921) Visitor Counter : 131