சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

அடிமட்டத்தில் மக்களை மையப்படுத்தும் சுகாதார சேவைகளை செயல்படுத்துவதையும் வட்டார அளவில் தொடங்கி சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் விரைவுபடுத்த மத்திய நிதியை உரிய நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு குறித்து டாக்டர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தல்

Posted On: 16 AUG 2022 3:01PM by PIB Chennai

நாடு முழுவதும் பல அடுக்கு சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்கி, விரிவுபடுத்தி, வலுப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கூட்டுறவு ஒத்துழைப்பு உணர்வுடன், மத்திய அரசு பணியாற்றி வருவதாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். தேசிய சுகாதார இயக்கம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம், 15ஆவது நிதி ஆணைய மானியங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து, மெய்நிகர் வடிவில் மாநில, யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடினார். கொவிட்-19 தடுப்பூசி இயக்கம் குறித்தும், அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கலந்துகொண்டார்.

திரிபுரா முதலமைச்சர் திரு பிப்லப் குமார் தேவ், தில்லி துணை முதலமைச்சரும், சுகாதார அமைச்சருமான திரு மணிஷ் சிசோடியா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்தின் திரு மா சுப்பிரமணியன், புதுச்சேரி முதலமைச்சர் திரு என். ரங்கசாமி உட்பட பல்வேறு மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இடையூறுகளை வாய்ப்பாகப் பயன்படுத்தி வலிமை பெற வேண்டும் என்ற பிரதமரின் சித்தாந்தம் குறித்து குறிப்பிட்ட டாக்டர் மன்சுக் மாண்டவியா, பெருந்தொற்று நமக்கு சுகாதார உள்கட்டமைப்பை ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் வலுப்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துள்ளதாக கூறினார். மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சையை வழங்குவதில் மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் கூறினார். மத்திய அரசு நிதியை, சில மாநிலங்கள் குறைந்த அளவில் பயன்படுத்தியிருப்பது குறித்து கவலை தெரிவித்த அமைச்சர், இத்தகையை மாநிலங்களை மத்திய அரசு ஆய்வு செய்து நிதியை அதிகளவில் பயன்படுத்த வலியுறுத்தும் என்று கூறினார்.

சுகாதார செயல்பாடுகளில் சந்திக்கும் சவால்கள் குறித்து, தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு மத்திய அமைச்சர், மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தார். சில சாவல்கள் குறித்து . சில மாநிலங்களின் அமைச்சர்கள் தெரிவித்ததுடன், மத்திய அமைச்சரின் தனிப்பட்ட முறையிலான கண்காணிப்புக்கு நன்றி தெரிவித்தனர்.

கொவிட் தடுப்பூசி சாதனைகளை எடுத்துரைத்த டாக்டர் மாண்டவியா, 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1852254

***************



(Release ID: 1852269) Visitor Counter : 164