கலாசாரத்துறை அமைச்சகம்
இல்லந்தோறும் மூவர்ணக்கொடி வலைதளத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட மூவர்ணக்கொடி செல்பி படங்கள் பதிவேற்றம்
Posted On:
15 AUG 2022 5:59PM by PIB Chennai
மகத்தான சாதனையாக இல்லந்தோறும் மூவர்ணக்கொடி வலைதளத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட மூவர்ணக்கொடி செல்பி படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
இந்தியா சுதந்திரத்தின் 76வது ஆண்டைத் தொடங்கும் வேளையில்,விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்னும் 75 வார கவுன்ட் டவுன் மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட இல்லந்தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்துடன் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
இந்த இயக்கத்தில் மாலை 4 மணி வரை 5 கோடி செல்பி படங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது இந்திய வரலாற்றில் சிறப்புமிக்க தருணமாகும்.
இந்த சாதனை பற்றி குறிப்பிட்டுள்ள கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சம் திரு கிஷன் ரெட்டி, கடமை உணர்வு கொண்ட இந்தியர்களின் நாடு முதலில் என்ற கூட்டு முயற்சியை இது பிரதிபலிப்பதாக கூறியுள்ளார். அனைவருக்கும் அவர் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1852066
***************
(Release ID: 1852087)
Visitor Counter : 308