உள்துறை அமைச்சகம்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இரங்கல்

Posted On: 14 AUG 2022 11:51AM by PIB Chennai

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மறைவுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் திரு அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில் , “ராகேஷ் ஜுன்ஜுன்வாலாஜியின் மறைவு குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். அவரது பரந்த அனுபவமும் பங்குச் சந்தை பற்றிய புரிதலும் எண்ணற்ற முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளது.  நேர்மறையான கண்ணோட்டம் கொண்ட அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி சாந்தி."  

********(Release ID: 1851728) Visitor Counter : 161