சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இந்திய சுதந்திரத்தின் 75 விடுதலையின் அமிர்தப்பெருவிழா கண்காட்சியை திரு நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்
Posted On:
13 AUG 2022 4:49PM by PIB Chennai
நாக்பூரில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் பங்கேற்ற சிறந்த மனிதர்களின் புகைப்படக் கண்காட்சியை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை திரு கட்கரி கவுரவித்தார்.
சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் விடுதலையின் அமிர்தப்பெருவிழா கண்காட்சிகளை நாடு முழுவதும் உள்ள 75 பேருந்து நிலையங்களில் சுதந்திர இந்தியாவின் புகழ்பெற்ற பயணத்தில் முக்கிய பங்கு வகித்த இந்திய மக்களை நினைவு கூரும் வகையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கண்காட்சிகள் சுதந்திரப் போராட்டத்தையும், இந்தியாவை சுதந்திரமாக மாற்றியமைக்கப் பங்காற்றிய துணிச்சலான ஆண்களும் பெண்களும் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் வகையில் செயல்பட்டதையும் சித்தரிக்கும். விடுதலைப் போராட்டத்தில் நமது தலைவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்புகளையும் இது எடுத்துக்காட்டுவதாக அமையும்.
***************
(Release ID: 1851613)
Visitor Counter : 179