மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
திரு தர்மேந்திர பிரதானை அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை இயக்குனர் சந்தித்து இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த விருப்பம் தெரிவித்தார்
Posted On:
09 AUG 2022 4:05PM by PIB Chennai
கல்வி மற்றும் திறன் துறைகளில் இந்தியாவுடனான தனது ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020ன் கீழ் பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகள் மற்றும் ஸ்டெம் படிப்புகளுக்கான இந்தியாவின் திட்டங்கள் குறித்து விவாதிக்க என்எஸ்எப் இயக்குநர் திருசேதுராமன் பஞ்சநாதன் இன்று மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதானை புது தில்லியில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது பேசிய திரு. பிரதான், இந்தியாவின் பலம் அதன் இளம் மக்கள்தொகை மற்றும் வலுவான அறிவுத் தளங்களில் உள்ளது என்று குறிப்பிட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஏராளமான திறமைகள் உள்ளன, அவை வளர்க்கப்பட காத்திருக்கின்றன என்றார். எனவே, நாட்டிலுள்ள முதன்மையான நிறுவனங்களான என்ஐடிகள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் தவிர அதிகம் அறியப்படாத மாநிலப் பல்கலைக்கழகங்கள்,இதுவரை பிரதிநிதித்துவப்படுத்தப்படாத நிறுவனங்களுடன் தனது ஈடுபாட்டை அதிகரிப்பதை என்எஸ்எப் கவனிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
என்எஸ்எப் என்பது அறிவியல் கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் ஸ்டெம் கல்வியை ஊக்குவிக்கும் பொறுப்பைக் கொண்ட ஒரு சுதந்திரமான கூட்டாட்சி நிறுவனமாகும். 8.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பட்ஜெட்டில், கணிதம், கணினி அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற துறைகளில் மத்திய அரசின் நிதியுதவியின் முக்கிய ஆதாரமாக என்எஸ்எப் உள்ளது. என்எஸ்எப் உடனான இந்தியாவின் ஈடுபாடுகளில் ஆறு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்கள் அடங்கும், இதன் கீழ் ஐஐடிகள், ஐஐஎஸ்சி பெங்களூர் போன்ற 8 நிறுவனங்கள் 30 திட்டங்களிலும் சைபர் செக்யூரிட்டியில் சில திட்டங்களிலும் ஒத்துழைக்கின்றன. இந்த ஈடுபாடுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்காக இயக்குனர் என்எஸ்எப் இந்தியாவில் உள்ளார்.
இந்தியாவைப் போலவே, உள்ளடக்கம் மற்றும் தரமான கல்விக்கான அணுகல் ஆகியவை அமெரிக்க அரசுக்கும் முன்னுரிமையாக உள்ளது என்று திரு பஞ்சநாதன் கூறினார். திறமையில் ஈடுபடுபவர்கள் உட்பட பிரதிநிதித்துவம் இல்லாத நிறுவனங்களுடன் என்எஸ்எப் ஒத்துழைப்பை ஏற்கொள்ளும் என்று அவர் உறுதியளித்தார்.
*******
(Release ID: 1850272)
Visitor Counter : 193