உள்துறை அமைச்சகம்
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா நாட்டு மக்களுக்கு வாழ்த்து
Posted On:
07 AUG 2022 12:55PM by PIB Chennai
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் திரு அமித் ஷா குறிப்பிட்டதாவது:
“இந்தியாவின் கைத்தறித்துறை, நமது வளமான, பன்முகத்தன்மை வாய்ந்த பாரம்பரிய கலாச்சாரத்தைப் பறைசாற்றுகிறது. கடந்த 1905-ஆம் ஆண்டு சுதேசி இயக்கம் இந்நாளில் தொடங்கப்பட்டதை முன்னிட்டு, இத்தகைய பண்டைய இந்திய கலைக்கு புத்துயிர் ஊட்டுவதற்காக ஆகஸ்ட் 7-ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக 2015-ஆம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார்.”
“உள்நாட்டு நெசவாளர்கள் நெய்த கைத்தறிப் பொருட்களை நாட்டு மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது தான் இந்நாளின் நோக்கமாகும். நம் கைத்தறி பாரம்பரியத்தைப் பாதுகாப்பது, ஊக்குவிப்பது, கைத்தறி நெசவாளர்கள், குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளிப்பது போன்ற மோடி அரசின் உறுதிப்பாடுகளுக்கு வலு சேர்க்க, 8-வது தேசிய கைத்தறி தினமான இன்று, நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1849340
•••••••••••••
(Release ID: 1849349)
Visitor Counter : 260