சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தில் 50 புள்ளிகள் அதிகரித்து 5.4 சதவீதமாக உயர்த்தியது
प्रविष्टि तिथि:
05 AUG 2022 1:26PM by PIB Chennai
ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக உயர்வு
வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டியான ரெப்போ வட்டி விகிதம் அரை சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகில் நிலவும் அசாதாரண சூழல், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் காணப்படும் பின்னடைவு, எதிர்பாராத பணவீக்க அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில், 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
பணவீக்கம் மற்றும் மேலும் அதிகரிக்கவுள்ள பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியதால், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. “தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம் தொடர்பான எதிர்பார்ப்புகளை சீர்குலைக்கும் மற்றும் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும்” என பணவியல் கொள்கை குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், தெரிவித்தார்.
வளர்ச்சி திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை - 2022-23-ல் 7.2%
இந்தியப் பொருளாதாரம் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் வளர்ச்சிக் கணிப்பில் எவ்வித மாற்றமும் இன்றி, நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாகவும், முதல் காலாண்டில் 16.2 சதவீதமாகவும் உள்ளது என்று ஆளுநர் கூறினார். 2-ம் காலாண்டில் 6.2% 3-வது காலாண்டில் 4.1% மற்றும் 4-வது காலாண்டில் 4.0%. 2023-24-ம் ஆண்டுக்கான உண்மையான பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1848656
***************
(रिलीज़ आईडी: 1848877)
आगंतुक पटल : 320