நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
மின்னணு வணிக அமைப்புகளுக்கான நெறிமுறைகளுக்கு எதிராக உள்நாட்டு பிரஷ்ஷர் குக்கர் விற்பனையை அனுமதித்ததற்காக அமேசான் நிறுவனத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு
Posted On:
04 AUG 2022 4:11PM by PIB Chennai
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நாட்டின் நுகர்வோர் பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக கண்காணித்து வருகிறது. மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் அட்டவணை இ(1)-ல் பட்டியலிடப்பட்டுள்ள மூலப்பொருட்களைக் கொண்ட ஆயுர்வேத சித்தா மற்றும் யூனானி மருந்துப் பொருட்கள் விற்பனை தொடர்பாக இந்த ஆணையம் அண்மையில், அனைத்து மின்னணு வணிக நிறுவனங்களுக்கும் அறிவுரை ஒன்றை வழங்கியிருந்தது. இது போன்ற மருந்து பொருட்களை பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலேயே விற்பனை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தவறாக வழிக்காட்டக் கூடிய விளம்பரங்களைத் தடுப்பது மற்றும் இது போன்ற விளம்பரங்களுக்கு ஏற்பளிப்பது தொடர்பாகவும் ஒரு வழிகாட்டு நெறிமுறையை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டிருந்தது. இது தவிர, ஹெல்மெட், பிரஷ்ஷர் குக்கர் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றை வாங்கும் போது அவை ஐஎஸ்ஐ முத்திரை மற்றும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தரத்திற்கு உட்பட்டதாக என்பதை உறுதி செய்யும் விதமாக எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், மின்னணு வணிக அமைப்புகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, 2065 உள்நாட்டு பிரஷ்ஷர் குக்கர்களை விற்பனை செய்ததற்காக அமேசான் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் முதன்மை ஆணையர் திருமதி நிதி கரே உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1848370
***************
(Release ID: 1848522)
Visitor Counter : 202