பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் விகாஸ் தாக்கூருக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 02 AUG 2022 10:17PM by PIB Chennai

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் விகாஸ் தாக்கூருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“காமன்வெல்த் போட்டிகளில் மற்றொரு வெற்றி. இந்த முறை பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார், விகாஸ் தாக்கூர். அவரது வெற்றியால் மகிழ்ச்சி அடைகிறேன். விளையாட்டில் அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அவரது வருங்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”

 

***

(Release ID: 1847625)


(வெளியீட்டு அடையாள எண்: 1847749) வருகையாளர் எண்ணிக்கை : 163