மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 27 JUL 2022 5:23PM by PIB Chennai

இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஃபிஃபா 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி 2022 இந்தியாவில் அக்டோபர் மாதம் 11-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

நிதியுதவி: இப்போட்டி நடத்துவதற்காக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஏழாவது 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கால்பந்துப் போட்டி பிரபலமடைவதுடன் இளைஞர்களும் இவ்விளையாட்டில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1845432

***************(Release ID: 1845509) Visitor Counter : 64