சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் 3 இடங்கள் உட்பட 5 இடங்களை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாக இந்தியா அறிவித்துள்ளது

Posted On: 26 JUL 2022 11:59AM by PIB Chennai

தமிழ்நாட்டில் கரிக்கிளி பறவைகள் சரணாலயம் பள்ளிக்கரனை சதுப்பு நிலக்காடு, பிச்சாவரம் சதுப்ப நிலக்காடு ஆகியவை  உட்பட 5 இடங்களை, ராம்சர் எனப்படும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த புதிய இடங்களாக  இந்தியா அறிவித்துள்ளது. மிசோரமில்  பாலா சதுப்பு நிலம், மத்தியப்பிரதேசத்தில் சாக்கிய சாகர் சதுப்புநிலம் ஆகியவை மற்ற இரண்டு புதிய இடங்களாகும். இத்துடன் ராம்சர் இடங்களின் எண்ணிக்கை 49-லிருந்து  54-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை  அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள முன்முயற்சி சதுப்பு நிலங்களை இந்தியா எவ்வாறு பராமரித்து முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதைக் காட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த  ராம்சர் அங்கீகாரம் பெற்ற   மேலும் 5 இந்திய சதுப்பு நிலங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

***************

(Release ID: 1844859)


(Release ID: 1844958) Visitor Counter : 489