பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் ஜோதியில் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துமாறு மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்

प्रविष्टि तिथि: 23 JUL 2022 1:49PM by PIB Chennai

விடுதலையின் அமிர்தப்பெருவிழாவை வலுப்படுத்த, டிஜிட்டல் ஜோதியில் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு செலுத்தும்  மரியாதையைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது;

"நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிறப்பான அஞ்சலி!

டிஜிட்டல் ஜோதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது . நமது  சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவிக்க உங்களை அனுமதிக்கிறது."

"தில்லியில் உள்ள மத்திய  பூங்காவில் ஸ்கை பீம் விளக்கு நிறுவப்பட்டுள்ளது. செலுத்தப்படும் ஒவ்வொரு அஞ்சலியும் டிஜிட்டல் ஜோதியின் ஒளியை பரவச் செய்யும். இந்த தனித்துவமான முயற்சியில் பங்கேற்று விடுதலையின் அமிர்தப்பெருவிழாவை வலுப்படுத்துங்கள்."

***************


(रिलीज़ आईडी: 1844182) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam