நித்தி ஆயோக்
நித்தி ஆயோக்கின் இந்திய புதுமை கண்டுபிடிப்புகள் 2021 பட்டியலில் கர்நாடகா, மணிப்பூர், சண்டிகர் ஆகியவை முன்னணியில் உள்ளன
प्रविष्टि तिथि:
21 JUL 2022 11:20AM by PIB Chennai
நித்தி ஆயோக்கின் இந்திய புதுமை கண்டுபிடிப்புகள் 2021 பட்டியலின் மூன்றாவது பகுதியில் கர்நாடகா, மணிப்பூர், சண்டிகர் ஆகியவை தங்களது பிரிவில் முன்னணியில் உள்ளன.
இதுகுறித்த பட்டியலை நித்தி ஆயோக்கின் துணைத்தலைவர் திரு சுமன் பெரி இன்று வெளியிட்டார்.
பெரிய மாநிலங்கள் பிரிவில் கர்நாடகா மீண்டும் முதலிடத்தையும், வடகிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்கள் பிரிவில் மணிப்பூரும், யூனியன் பிரதேசங்கள் பிரிவில் சண்டிகரும் முதலிடம் வகிக்கின்றன. மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு 15.69 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. தெலங்கானா, ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கேரளா, ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்கள் முதல் பத்து இடத்தில் இடம்பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843317
***************
(रिलीज़ आईडी: 1843563)
आगंतुक पटल : 458