நித்தி ஆயோக்

இந்திய புத்தாக்க குறியீட்டின் மூன்றாவது பதிப்பை நித்தி ஆயோக் வெளியிடுகிறது

Posted On: 20 JUL 2022 9:10AM by PIB Chennai

நித்தி ஆயோக் பவனில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இந்திய புதிய கண்டுபிடிப்பு குறியீட்டின் மூன்றாவது பதிப்பை வெளியிடுகிறது. நித்தி ஆயோக் துணைத் தலைவர் திரு சுமன் பெர்ரி, அதன் உறுப்பினர் டாக்டர் வி கே சரஸ்வத், தலைமை செயல் அதிகாரி திரு பரமேஸ்வரன் ஐயர் ஆகியோர்
முன்னிலையில் வெளியிடுகிறார்.

நாட்டை புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த பொருளாதாரமாக மாற்றும் அரசின் முயற்சியின் பகுதியாக நித்தி ஆயோக் இந்த குறியீடுகளை வெளியிட்டு வருகிறது. 2019 ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பதிப்பும், 2021 ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் பதிப்பும் வெளியிடப்பட்டன.
உலகம் முழுவதும் மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்திய தொற்றுநோயின் பின்னணியில் இந்திய கண்டுபிடிப்பு குறியீடு 2021 வெளியிடப்படுகிறது. பின்னடைவு மற்றும் நெருக்கடிக்கிடையே உந்தப்பட்ட கண்டுபிடிப்புகள் இந்த கடினமான காலத்தில், இந்தியா மீண்டும் முன்னேற உதவியுள்ளது. இந்திய கண்டுபிடிப்பு குறியீடு 2021, துணை தேசிய அளவில் புதுமை திறன்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆய்வு செய்கிறது, இதுபோன்ற நெருக்கடியால் இயக்கப்படும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான சமீபத்திய காரணிகள் மற்றும் வினையூக்கிகளை அது எடுத்துக்காட்டுகிறது.

மூன்றாவது பதிப்பு, உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டின் (ஜிஐஐ) கட்டமைப்பை வரைவதன் மூலம் நாட்டில் புதுமைப் பகுப்பாய்வின் நோக்கத்தை வலுப்படுத்துகிறது. முந்தைய பதிப்பில் பயன்படுத்தப்பட்ட 36 குறிகாட்டிகளுடன் ஒப்பிடும்போது, ​​66 தனித்துவமான குறிகாட்டிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்தியாவில் புதுமை செயல்திறனை அளவிடுவதற்கான மிகவும் நுணுக்கமான மற்றும் விரிவான கண்ணோட்டத்தை புதிய கட்டமைப்பு வழங்குகிறது.

இந்த விரிவான கட்டமைப்பின் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கண்டுபிடிப்பு செயல்திறனைக் குறியீடு
மதிப்பிடுகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 17 & 39;பெரிய மாநிலங்கள்', 10 'வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள்& 39; 
மற்றும் 9 'யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகர மாநிலங்கள்' என பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு  https://youtu.be/h9Esk5EFpP4  என்ற யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படும்

***************



(Release ID: 1842961) Visitor Counter : 468