ஆயுஷ்

பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி கொவிட்-19க்கான மருந்து உருவாக்கம்

Posted On: 19 JUL 2022 2:40PM by PIB Chennai

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), உயிரி தொழில்நுட்பத்துறை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்), அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) ஆகியவற்றின் பிரதிநிதித்துவத்துடன் ஆயுஷ் அமைச்சகம் ஒரு இடைநிலை ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  பணிக்குழுவை உருவாக்கியுள்ளது.  மேலும் கோவிட்19  நோய்த்தடுப்பு ஆய்வுகள் மற்றும் கூடுதல் தலையீடுகளுக்கான மருத்துவ ஆராய்ச்சி நெறிமுறைகளை உருவாக்கி வடிவமைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி கவுன்சில்கள் மற்றும் தேசிய நிறுவனங்களால் 150 மருத்துவ, முன் மருத்துவ மற்றும் தொற்றுநோயியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொவிட்-19 போன்ற தொற்று நோய்களைத் தடுக்க ஆயுஷ் அமைச்சகத்தால் பல்வேறு  முயற்சிகள்/நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆயுஷ் அமைச்சகம் கோவிட் நோயிலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்வது மற்றும் ஆரோக்கியமாக இருப்பது எப்படி என்பது குறித்த ஆலோசனையை வெளியிட்டது. ஆலோசனையில், கை கழுவுதல், முகக்கவச பயன்பாடு போன்ற சுகாதாரத்தை பராமரிப்பதோடு கூடுதலாக, மக்களுக்கு எளிய வீட்டு வைத்தியங்களும் பரிந்துரைக்கப்பட்டன.

அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறைகளுடன் ஒருங்கிணைந்து தேவைப்படும் இடங்களில் மக்களின் பொது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் சாத்தியமான ஆயுஷ் தலையீடுகள் குறித்து மேலும் குறிப்பிட்ட பரிந்துரைகளுடன் அமைச்சகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது.

கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு மிகப்பெரிய ஆயுஷ் உள்கட்டமைப்பை ஒருங்கிணைத்து பயன்படுத்துமாறு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

அனைத்து ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி  கல்லூரிகளின் முதல்வர்களுக்கு மருத்துவமனை, நோயியல் ஆய்வகம், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியர்களைக் கொண்ட  மனிதவளம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்துமாறு கடிதம் அனுப்பப்பட்டது.  எனவே, சூழ்நிலைக்கு ஏற்ப உள்ள வசதிகளை பயன்படுத்திக் கொள்ள உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தங்கள் சேவைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதன்படி, பல்வேறு ஆயுஷ் நிறுவன மருத்துவமனைகள் மாநில அரசுகளால் பயன்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் மையம், கோவிட் பராமரிப்பு மையம் மற்றும் கோவிட் சுகாதார மையம் என்ற வகைகளாக பிரிக்கப்பட்டன.

தடுப்பு சுகாதார நடவடிக்கைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சுய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைக்கிறது.

கொவிட்19 தொற்றுக்கு தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள், அலோபதி, ஹோமியோபதி மருந்துகளுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய எந்த மருந்தும் இதுவரை உருவாக்கப்படவில்லை.

மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

***************

(Release ID: 1842665)



(Release ID: 1842690) Visitor Counter : 213