பிரதமர் அலுவலகம்
ராம்பூர் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
17 JUL 2022 1:48PM by PIB Chennai
ராம்பூரில் சாலைவிபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அவர் இரங்கலைத் தெரிவித்துள்ளார். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் அனைத்து இயன்ற உதவிகளையும் வழங்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"உத்திரபிரதேச மாநிலம் ராம்பூரில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் கண்காணிப்பில் உள்ளாட்சி நிர்வாகம், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது: பிரதமர் மோடி"
*********
(வெளியீட்டு அடையாள எண்: 1842182)
வருகையாளர் எண்ணிக்கை : 235
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam