கலாசாரத்துறை அமைச்சகம்

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவையொட்டி 22வது பாரத் ரங் பெருவிழா 2022-ஐ மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் தொடங்கிவைத்தார்

Posted On: 17 JUL 2022 10:33AM by PIB Chennai

மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டை விடுதலையின் அமிர்தப்பெருவிழாவாகக் கொண்டாடி வருகிறது. புதுதில்லியின் தேசிய நாடகப் பள்ளி, நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், “ 22வது பாரத் ரங் மஹோத்சவ், 2022” என்ற விழாவை நடத்துகிறது. இந்தப்பெருவிழா ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 14, 2022 வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவை நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் திரு  அர்ஜுன் ராம் மேக்வால் துவக்கிவைத்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற செல்வி. மாலினி அவஸ்தி, புகழ்பெற்ற இந்திய நாட்டுப்புற பாடகர் திரு அரவிந்த் குமார், கலாசார அமைச்சகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அர்ஜுன் ராம் மேக்வால், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்தும், நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியாக மாற முடியவில்லை என்று கூறினார். உதாரணமாக, 1913 ஆம் ஆண்டு மாங்கரில், அந்தப் பகுதியின் பழங்குடியினர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர், ஆனால் அது பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட்ட சம்பவம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். நாடக ஆர்வலர்களும் தேசிய நாடகப் பள்ளியும் அந்தச் சம்பவங்களின் அடிப்படையில் நாடகங்களைத் தயாரிக்க முன்வர வேண்டும், இது போன்ற மாவீரர்களைப் பற்றி குடிமக்களுக்கு உணர்த்தவும், அவர்களின் வீரம் மற்றும் துணிச்சலான கதைகளை வெளிக்கொணரவும் நாடு முழுவதும் நாடகங்களை நடத்த வேண்டும், என்று அவர் கேட்டுக்கொண்டார்.

செல்வி. மாலினி அவஸ்தி தமது உரையில், சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போற்றும் வகையில் இந்தியாவின் பெரும்பகுதி முழுவதும் பாடப்படும் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்களைக் குறிப்பிட்டார். இதுபோன்ற பல பாடல்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன, ஆனால் நாட்டுப்புற கலைஞர்கள் அவற்றைப் பாடிக்கொண்டே இருந்தனர், இதன் மூலம் வெளியே அதிகம் தெரியாத  நாயகர்களின் கதைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றனர். இந்த விழாவில் தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநர் பேராசிரியர்.ரமேஷ் சந்திர கவுர் தலைமை வகித்தார்.

தொடக்க விழாவைத் தொடர்ந்து திரு பன்சி கவுல் இயக்கிய “ஆரண்யாதிபதி தன்டியா மாமா” நாடகம் நடைபெற்றது.

***************



(Release ID: 1842147) Visitor Counter : 224