கூட்டுறவு அமைச்சகம்
நாளை நடைபெறும் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் தேசிய மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு
Posted On:
15 JUL 2022 11:37AM by PIB Chennai
தேசிய வேளாண் கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி கூட்டமைப்பு வங்கிகள் நிறுவனம், புதுதில்லியில் நாளை (16.07.2022) நடத்தும் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் தேசிய மாநாட்டில், மத்திய உள்துறை விவகாரங்கள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். விடுதலையின் அமிர்த பெருவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்களுடன் தொடர்பில் இருக்கும் திட்டங்கள் உள்ளிட்ட துறைசார் திட்டங்களை அடித்தள நிலையில் இந்த மாநாடு மேம்படுத்தும்.
கூட்டுறவுத் துறையில் விவசாயிகள், வேளாண்மை மற்றும் ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்கு அபரிமிதமான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவேதான் ‘ஒத்துழைப்பின் வாயிலாக வளம்' என்ற தாரக மந்திரத்துடன் கூட்டுறவுத் துறைக்கு அதிகாரமளிக்கும் முயற்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
2020-21 ஆம் ஆண்டில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கேரளா, கர்நாடகா, குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநில வேளாண் கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு நாளைய நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படும். 90 ஆண்டுகளுக்கும் மேலாக தடையற்ற சேவையை வழங்கி வரும் நாட்டின் மிகப் பழமையான நான்கு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கும் விருதுகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841701
----
(Release ID: 1841701)
(Release ID: 1841719)
Visitor Counter : 215