பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத் திட்டங்களின் அவசியத் தூதுவர்கள் என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

Posted On: 09 JUL 2022 3:17PM by PIB Chennai

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களின் அத்தியாவசியத் தூதர்கள் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய ஏழைகள் மற்றும் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றின் பலனையும், கடைசி வரிசையில் உள்ள கடைசி மனிதர் வரை, அடிமட்டத்தில் கொண்டு சேர்ப்பதில் பஞ்சாயத்து அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு தனிப் பங்கு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் சவுத்ரி பூபிந்தர் சிங் முன்னிலையில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், தொடக்கத்தில் இருந்தே, பிரதமர் நரேந்திர மோடி அதிகாரமளித்தலுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் மாவட்ட கவுன்சில்களின் தேர்தலை பிரதமர் மோடி நடத்தியதையும், மாநிலத்தில் சில எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பஞ்சாயத்து தேர்தல்களை முன்னெடுத்துச் சென்றதயும் அவர் நினைவு கூர்ந்தார்.

 பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்உஜ்வாலா திட்டம், பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு திட்டம், பிரதமரின் உழவர் நிதி, தூய்மை இந்தியா திட்டம் போன்ற திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு தகுதியான எந்தவொரு குடிமகனும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வது உள்ளாட்சி அமைப்புகளின்  பொறுப்பாகும் என்று  அவர் கூறினார்.

பயனாளிகளுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய மக்கள், ஏழைகள் நலத் திட்டங்கள் குறித்து முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

ஏழைகளின் நலனுக்கான ஒவ்வொரு திட்டத்திலிருந்தும் யாரும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த, மாவட்ட நிர்வாகத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் பணியாற்றுமாறு பஞ்சாயத்து  பிரதிநிதிகளை டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவுறுத்தினார். செறிவூட்டல் இலக்கை அடைய உதவும் வகையில், திட்டத்தின் ஒவ்வொரு பயனாளியும் குறைந்தது இரண்டு தகுதியான நபர்களைச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

•••••••••••••


(Release ID: 1840384) Visitor Counter : 225