எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பிரதமரின் கதிசக்தி தேசிய பெருந்திட்டம்-“மின்சார கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உத்வேகம்”


மின்சாரத்தை எடுத்துச்செல்லும் திட்டங்களில், திட்டமிடல் & செயல்பாட்டு நடைமுறைகளை எளிதாக்கி, வழி நடத்துவதை விரிவாக கண்காணிப்பதற்கான இணையதளம்

பிரதமரின் கதிசக்தி தேசிய பெருந்திட்டம், திட்டமிடல், ஒப்பந்தம் கோருதல், செயல்படுத்துதல் மற்றும் ஒப்புதல் நிலைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் மிகுந்த 6 மாநிலங்களில் 9 உயர் விளைவை ஏற்படுத்தும் மின் திட்டங்கள் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன

Posted On: 07 JUL 2022 12:19PM by PIB Chennai

கட்டமைப்பு வளர்ச்சிக்கான தேசிய பெருந்திட்டம்- பிரதமரின் கதி சக்தியை, அக்டோபர் 2021ல் பிரதமர் தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலை, ரயில்வே, விமானப்போக்குவரத்து, எரிவாயு, மின்சாரம் எடுத்துச்செல்லுதல், புதுபிக்கத்தக்க எரிசக்தி போன்ற அனைத்து  பல்வேறு அமைச்சகங்கள்/ கட்டமைப்பு திட்டமிடலை ஒருங்கிணைந்த ஒற்றை தொலைநோக்கின் கீழ் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.  இதுவரை இல்லாத இதுபோன்ற முன்முயற்சிகள் நாடு முழுவதும் கட்டமைப்பு வளர்ச்சியை,  குறிப்பாக, “மின்சாரம்” மற்றும் “எடுத்துச்செல்லுதல்” “நடவடிக்கைகள் நாட்டின் எரிசக்தி வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

“தற்சார்பு இந்தியா” இந்தியா குறிக்கோளை பூர்த்தி்செய்யும் விதமாக, குஜராத்தின் பைசாக்-என் உருவாக்கிய உள்நாட்டு இஸ்ரோ படத்தொகுப்புடன் நிலப்பரப்பு திட்டமிடல் சாதனங்கள் உட்பட தொழில்நுட்பத்தை விரைவாக பயன்படுத்தும் பல்வேறு பொருளாதார மண்டலங்களுக்கு பல்வகை இணைப்பு வசதியை வழங்குவதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த பாடுபடும் நாடு என்ற முறையில், கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரதமரின் கதிசக்தி தேசிய பெருந்திட்ட இணையதளம், மின்சாரத்தை எடுத்துச்செல்வதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கான நேரம் மற்றும் செலவை குறைப்பதன் மூலம், திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளை எளிமைப்படுத்தி வழிகாட்டுவதற்கு,  “ஒரு கிளிக்கில் விரிவான கண்காணிப்பு”–ஐ வழங்குகிறது. 

மின்சாரம் எடுத்துச் செல்லும் திட்டங்களை உருவாக்குவதில்,  திட்டமிடல், ஒப்பந்தப்புள்ளி, செயலாக்கம் மற்றும் ஒப்புதல் நிலைகளில், பிரதமரின் கதிசக்தி தேசிய பெருந்திட்ட இணையதளம் முக்கியப் பங்கு வகிக்கிறது.  திட்டமிடல் நிலையில், திட்டமிடப்பட்டுள்ள மின்சாரம் எடுத்துச் செல்லும் பாதையின் உத்தேச நீளம் மற்றும் துணை மின் நிலையங்கள் அமையும் இடத்தை பயணாளர் அடையாளம் காணலாம்.  ஒப்பந்தப்புள்ளி கோருதல்/ ஏல நிலைகளில்,  ஆய்வு அமைப்பு, இந்த இணையதளம் மூலம், சிறந்த தொழில்நுட்ப –பொருளாதார வழித்தடத்தை அடையாளம் காண முடியும்.   செயல்பாட்டு நிலையின்போது, அப்போதைய சூழ்நிலை அடிப்படையில், மின்சாரம் எடுத்துச் செல்லும் பாதை மற்றும் துணை மின் நிலையங்கள் அமையும் இடத்தை இறுதி செய்யலாம்.  இறுதியாக, ஒற்றைச்சாளர அனுமதி, ஒப்புதல் நிலையயாக கருதப்படுகிறது.

“ஒரு சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொகுப்பு” என்ற பிரதமரின் வேண்டுகோள், வலிமையான மற்றும் நம்பகமான மின்சாரம் எடுத்துச்செல்லும் முறைக்கான வழிமுறையைக் காட்டுவதோடு, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நோக்கங்களுடன், உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சிக்கு உறுதுணைபுரிகிறது.  மின்சாரம் எடுத்துச் செல்லுதல் என்பது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் செயல்படுத்துபவராக செயல்படுவதோடு, நாடு முழுவதும் பல்வேறு  முக்கிய மின் திட்டங்களில், நாடு முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வெளியே எடுத்துச்செல்ல உதவுகிறது.   இந்தத் திட்டங்களில்,  9 உயர் விளைவு மின் திட்டங்களை  மத்திய மின்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.  இந்தத் திட்டங்கள், தமிழ்நாடு, கர்நாடகா, மகராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் மிகுந்த 6 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது.  அடிப்படைப் புள்ளி விவரங்களை உள்ளடக்கிய ஐஎஸ்டிஎஸ் மின்கடத்தி பாதைக்கு பிரத்யேக அடுக்கை உருவாக்குவதன் மூலம், இந்தத் திட்டங்களின் விவரங்கள், இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

 பிரதமரின்  கதி சக்தி திட்டம் குறிக்கோளின்படி,  ஒட்டுமொத்த

“தற்போதைய” மாநிலங்களுக்கிடையே மின்சாரம் எடுத்துச்செல்லும் பாதை குறித்த  நாடு முழுவதற்குமான தகவல்கள் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் தற்போது அமைக்கப்பட்டு வரும் மாநிலங்களுக்கிடையேயான மின்சாரம் எடுத்துச்செல்லும் பாதையின் 90% இணையதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 10% பாதை சம்பந்தப்பட்ட அமைப்பினரால் மின்சாரம் எடுத்துச்செல்லும் பாதை உறுதி செய்யப்பட்டவுடன் இணைக்கப்படும். 

பிரதமரின் கதிசக்தி தேசிய பெருந்திட்ட இணையதளம், பொருளாதார மண்டலங்களுக்கு தடையற்ற இணைப்பு வசதியை உருவாக்குவதற்கான கட்டமைப்பு திட்டமிடல் குறித்த பாதுகாப்பான, நீடித்த, அளவிடத்தக்க மற்றும் கூட்டு அணுகுமுறைகள், நாட்டின் கட்டமைப்பு வசதி மேம்பாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவிகரமாக இருக்கும்.

தற்போது, பிரதமரின் கதிசக்தி தேசிய பெருந்திட்ட இணையதளம் மூலம், அமைச்சகங்கள், பயன்பாட்டு அமைப்புகள் மற்றும் கட்டமைப்புக்கான முழுமையான மற்றும் விரிவான அணுகுமுறையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாடு என்ற முறையில், 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான மாபெரும் முயற்சியை மேற்கொள்ளும் அதே வேளையில், “அனைவருக்கும் மின்சாரம்” கிடைக்கச்செய்வது நம்பகத்தன்மையை ஏற்படுத்தும்.

*************** (Release ID: 1839868) Visitor Counter : 239