சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனம் & பருவ நிலை மாற்றம் அமைச்சகம் சார்பில் மரங்கள் திருவிழா கொண்டாடப்பட உள்ளது
Posted On:
06 JUL 2022 5:52PM by PIB Chennai
விடுதலையின் அமிர்த பெருவிழாவை முன்னிட்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனம் & பருவநிலைமாற்றம் அமைச்சகம் சார்பில் “ஹரியாலி மகோத்சவ்” எனப்படும் மரங்கள் திருவிழா புதுதில்லி தால்கதோரா அரங்கத்தில் வரும் ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவின் நோக்கம், மரங்கள் குறித்து நமக்கு மட்டுமல்லாமல், வரும் தலைமுறையினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்த விழாவானது வனங்களை பாதுகாப்பதற்கும், மரம் நடுதல் குறித்தும் பெருவாரியான மக்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில், ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
மத்திய வனம் சுற்றுச்சூழல் பருவ நிலை மாற்றம் அமைச்சகம் மாநில அரசுகள், காவல்துறை, தில்லியில் உள்ள பள்ளிகள் ஆகியவற்றுடன் இணைந்து மரகன்றுகள் நடப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்வாக, நாடுமுழுவதும் 75 நகர்ப்புற வனங்கள், 75 காவல் நிலையங்கள், தில்லியில் உள்ள 75 பள்ளிகள் மற்றும் பயிரிட தகுதியற்ற 75 இடங்கள் செம்மைப்படுத்தப்பட்டு, அங்கு மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனம் & பருவ நிலைமாற்றம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், மத்திய பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு மற்றும் வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப்சிங் பூரி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனம் & பருவ நிலைமாற்றம் துறை இணையமைச்சர் திரு அஷ்வினி குமார் சௌபே மற்றும் தில்லி துணை நிலை ஆளுனர் வினய் குமார் சக்சேனா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1839622
***************
(Release ID: 1839657)
Visitor Counter : 342