நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிர்வாக பணியாளர்கள் அல்லாதவர்களின் ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர நிலக்கரி இந்தியா நிறுவனம் திட்டம்

प्रविष्टि तिथि: 06 JUL 2022 10:47AM by PIB Chennai

நிலக்கரி இந்தியா நிறுவனம், தேசிய நிலக்கரி ஊதிய ஒப்பந்தம்11-ன் கீழ், இதுவரை 5 கூட்டங்களை நடத்தியுள்ளதாக நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிர்வாக பணியாளர் அல்லாதோர்களின் ஊதியம் குறித்து இருதரப்பிற்கும் சுமூகமான முடிவை  விரைவில் எடுக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நிலக்கரி இந்தியா நிறுவனம் அதன் தொழில் சங்கங்களுடன் இணக்கமான உறவைப் பேணுவதுடன், நிலக்கரித் துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஊழியர்களிடையே முரண்பாடுகளையும், வேலைநிறுத்தங்களையும் தவிர்க்க முயற்சி எடுத்து வருகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக இதுபோன்ற  முடிவுகளை  எடுக்க  சிறு கால அவகாசம்  எடுக்கும்.

முந்தைய மூன்று ஊதிய ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடித்த நாட்டின் முதல் மத்திய பொதுத்துறை நிறுவனம் நிலக்கரி இந்தியா நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில், இந்த முறையும் ஊதிய ஒப்பந்தத்தை விரைவாக முடிக்க முடியும் என நிலக்கரி இந்தியா நிறுவனம் நம்புகிறது.

மேற்கூறிய விளக்கத்துக்கு முரணான எந்த ஒரு அறிக்கையும் உண்மைக்குப் புறம்பானது அல்லது ஒருதலைப்பட்சமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

                             ***************


(रिलीज़ आईडी: 1839543) आगंतुक पटल : 223
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu , Kannada