சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்திய பார்மாகோபியா ஆணையத்தின் மாநாடு 2022-க்கு தலைமை வகித்த டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்த நூலின் 9-வது பதிப்பையும் வெளியிட்டார்

Posted On: 01 JUL 2022 3:57PM by PIB Chennai

இந்திய பார்மாகோபியா ஆணையத்தின் மாநாடு 2022-க்கு தலைமை வகித்த மத்திய சுகாதாரம்- குடும்ப நலம் மற்றும் ரசாயன உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மருந்து பொருட்களின் குணங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்புமுறையை விளக்கும் நூலான பார்மாகோபியாவின் 9-வது பதிப்பையும் புதுதில்லியில் இன்று வெளியிட்டார். மத்திய இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

 நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவின் பார்மாகோபியாவை உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்டு பாராட்டப்பட வேண்டும் என்ற தமது விருப்பத்தை வெளியிட்டார். உலகம் முழுவதற்கும் குறைந்தவிலையில் மருந்து பொருட்களை விநியோகித்ததன் மூலம்,  பாரம்பரிய மருந்து கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியில் “உலகின் மருந்து கிண்ணமாக” நாம் மாறியுள்ளோம் என்று தெரிவித்தார்.  எனினும் மருந்து தயாரிப்பு ஆராய்ச்சி துறையை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  இதுவரை நேபாளம், மொரிஷியஸ், ஆப்கானிஸ்தான், கானா ஆகிய 4 நாடுகள் இந்திய பார்மாகோபியாவை, தர நூலாக ஏற்று கொண்டுள்ளன. மேலும் பல நாடுகள் நமது பார்மாகோபியாவை ஏற்றுகொள்ளும் வகையில் நாம் செயல்திட்டத்தை வகுத்து முன்னோக்கி செல்லவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் இந்தியாவின் பங்களிப்பை சுட்டிக்காட்டிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, “நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் விளைவாகவும், அதற்கான நமது உழைப்பின் காரணமாகவும், உலகம் நம்மை அங்கீகரிக்கத் தொடங்கியிருப்பதுடன், நமது பணிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அதனை ஏற்றுக்கொண்டு வருவதாகவும் கூறினார். நமது மருந்து பொருட்களான- தடுப்பூசிகள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள் போன்றவற்றின் தரத்தை பராமரிப்பதுடன், நோயாளிகளிடம் இந்த மருந்துகள் ஏற்படுத்தும் விளைவை கருத்தில் கொண்டு ஆரோக்கியமான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதில் பார்மாகோபியா அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

***************



(Release ID: 1838604) Visitor Counter : 162