வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

2021-22-ம் நிதியாண்டில், இந்திய கடல்சார் தயாரிப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து, 30% வளர்ச்சியடைந்து, ரூ.57,586.48 கோடியாக இருந்தது (அமெரிக்க டாலரில் 7.76 பில்லியன்)

Posted On: 29 JUN 2022 3:15PM by PIB Chennai

இந்தியா கடும் சவால்களுக்கு இடையே, 2021-22-ம் நிதியாண்டில், 57,586.48 கோடி மதிப்பிலான (அமெரிக்க டாலரில் 7.76 பில்லியன்) 13,69,264 மெட்ரின் டன் அளவிலான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துள்ளது. 2021-22-ம் நிதியாண்டில், ஏற்றுமதி பணமதிப்பின் அடிப்படையில், 31.71 சதவீதம் அளவு அமெரிக்க டாலரில் 30.26 சதவீதமும், அளவின் அடிப்படையில் 19.12 சதவீதமும் அதிகரித்துள்ளது.  இந்தியா 2021-22-ம் ஆண்டில், ரூ.43,720.98 கோடி மெட்ரிக் டன் அளவிலான (அமெரிக்க டாலரில் 5,956.93 பில்லியன்) கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துள்ளது.  

கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் திரு.கே.என்.ராகவன், கொவிட் அச்சுறுத்தலால், முக்கிய  ஏற்றுமதி சந்தைகளில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், 13,69,264 மெட்ரிக் டன் அளவு (அமெரிக்க டாலரில் 7.76 பில்லியன்) மதிப்பிலான  கடல் உணவுகளை இந்தியா ஏற்றுமதி செய்ய முடிந்தது என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837884

***************



(Release ID: 1838026) Visitor Counter : 167