வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் நீடித்த வளர்ச்சியின் இலக்கை அடைவதற்கு உலகிலேயே மிகப்பெரிய நகர்ப்புற திட்டம் மற்றும் பல்வேறு மாற்றத்திற்கான கொள்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது: திரு ஹர்தீப் சிங் பூரி

Posted On: 29 JUN 2022 1:36PM by PIB Chennai

உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய  நகர்ப்புற திட்டம் இந்தியாவில் உள்ளது என்றும், உலகளவில் நகர்ப்புற மக்கள் தொகையில் 11 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 2018- ஆம் ஆண்டு முதல் 2050- ஆண்டுக்கு இடையில் மேலும் சுமார் 416 மில்லியன் பேர் நகர்ப்புற மக்கள் தொகையில் சேர்வார்கள் என்று அவர் கூறினார்.

 போலந்து நாட்டின் கோட்டாவிஸ் நகரில் நடைபெற்ற 11-வது உலக நகர்ப்புற கூட்டத்தின் போது அமைச்சரின் உரையை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளரும், இந்திய குழுவின் தலைவருமான திரு சஞ்சய் குமார் வாசித்தார். பாரீஸ் ஒப்பந்தத்தின் பருவநிலை மாற்ற நோக்கங்களை நிறைவேற்றும் வகையில், இந்தியாவின் நீடித்த நகர்ப்புற போக்குவரத்து கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த உரையில் அவர் குறிப்பிட்டார்.

 மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837860

**************



(Release ID: 1837920) Visitor Counter : 156