மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

இந்தியாவில் பள்ளிக் கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடு யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது

Posted On: 19 JUN 2022 3:47PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித் துறையின் பிரதமரின் இ-வித்யா என்ற விரிவான முன்முயற்சியின் கீழ், குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தியதுயுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 2020 மே 17 அன்று கல்வி அமைச்சகத்தால் தற்சார்பு இந்தியா  திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமரின் இ-வித்யா தொடங்கப்பட்டது, இது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வியை வழங்குவதற்கான பல முறை அணுகலை செயல்படுத்த டிஜிட்டல்/ஆன்லைன்/ஆன்-ஏர் கல்வி தொடர்பான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைக்கிறது. கற்றல் இழப்புகளை குறைக்க. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கீழ் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) ஒரு அங்கமான மத்திய கல்வித் தொழில்நுட்ப நிறுவனம் யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக யுனெஸ்கோவின் மன்னர் ஹமத் பின் இசா அல்-கலிஃபா பரிசு வழங்கப்பட்டது.

இந்த விருது "நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரல் மற்றும் கல்விக்கான 4-ம் இலக்கின் படி, அனைவருக்கும் கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை விரிவுபடுத்த புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் புதுமையான அணுகுமுறைகளை அங்கீகரிக்கிறது. பஹ்ரைன் அரசின் ஆதரவுடன் 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பரிசு, டிஜிட்டல் யுகத்தில் கற்றல், கற்பித்தல் மற்றும் ஒட்டுமொத்த கல்வி செயல்திறனை மேம்படுத்த தொழில்நுட்பங்களின் ஆக்கப்பூர்வமான பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.மேலும் சிறந்த திட்டங்களை செயல்படுத்தும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வெகுமதி அளிக்கிறது. ஒரு சர்வதேச நடுவர் குழு ஆண்டுதோறும் இரண்டு சிறந்த திட்டங்களைத் தேர்ந்தெடுக்கிறது. இந்த ஆண்டு ஜூன் 24ந்தேதி பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு பரிசு வென்றவரும் US$ 25,000, ஒரு பதக்கம் மற்றும் டிப்ளோமாவைப் பெறுகிறார்கள்.

அனைவருக்கும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தவும், கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், நாட்டின் கல்வி முறையில் சமத்துவத்தை கொண்டு வரவும் மற்றும் கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்வி கொள்கை -2020 இன் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு சிஐஇடி, என்சிஇஆர்டி மூலம் மலிவு விலையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான ஆணையுடன் ஏராளமான மின்புத்தகங்களை வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் பரப்புதல் - ஆடியோக்கள், வீடியோக்கள், கலந்துரையாடல்கள், இந்திய சைகை மொழி வீடியோக்கள், பேசும் புத்தகங்கள் போன்றவற்றை வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றில் கல்வி அமைச்சகம் அயராது உழைத்து வருகிறது. பள்ளி மற்றும் ஆசிரியர் கல்விக்கான பல்வேறு வகையான இ-வகுப்புகள், ஆன்லைன்/ஆஃப்லைன், ஆன்-ஏர் டெக்னாலஜி ஒன் கிளாஸ்-ஒன் சேனல், திக்ஷா, இபாடசாலா, நிஷ்தா, ஸ்வயம் போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் முதன்மையாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆன்லைன் வினாடி வினா போன்ற டிஜிட்டல் நிகழ்வுகள்  ஏற்பாடு செய்யப்படுகின்றன.

பிரதமர் இ-வித்யா திட்டத்தின் கீழ் உள்ள சமூக வானொலி நிலையங்கள் உட்பட 12 டிடிஎச் சேனல்கள் மற்றும் கிட்டத்தட்ட 397 வானொலி நிலையங்களின் விரிவான, மற்றும் ஒத்திசைவான பயன்பாட்டின் மூலம் குழந்தைகளின் வீட்டு வாசலில் கற்றலை எடுத்துச் செல்வதில் சிஐஇடி முனைப்புடன் செயல்பட்டது. இந்த முயற்சிகள் குறிப்பாக தொற்றுநோய் சூழ்நிலைகளில், பள்ளிகள் மூடப்பட்டபோது, மாணவர்களைச் சென்றடைவதற்கு உதவியாக இருந்தன. இந்த முயற்சிகள் கற்றல் இடைவெளியை பெரிய அளவில் தடுத்து நிறுத்த உதவியது.

************



(Release ID: 1835331) Visitor Counter : 419