சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைச்சகம், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை தொடர்பு கொண்டுள்ளது; இசிஆர்பி-II, 15-வது நிதிக்குழு நிதித் திட்டங்களின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

Posted On: 17 JUN 2022 3:04PM by PIB Chennai

தேசிய சுகாதார இயக்கம், அவசர கால கொவிட் சிகிச்சை தொகுப்பு (இசிஆர்பி-II), பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு இயக்கம், 15-வது நிதிக்குழு மானியம் மற்றும் பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன், இன்று காணொலி வாயிலாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆய்வு செய்தார்.

          நாடு முழுவதும் பொது சுகாதாரச் சேவைகள் குறைந்த செலவில் அனைவருக்கும் ஒரே மாதிரியாக கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்துரைக்கும் விதமாக, இத்திட்டத்தின் அமலாக்கம் மற்றும் தேசிய சுகாதார இயக்கம் உள்ளிட்ட திட்டங்களின்கீழ் வழங்கப்படும் நிதிப்பகிர்வு குறித்து, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

          இந்தத் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் செயல்படுத்தப் படுவதை உறுதி செய்ய, அரசால் ஒதுக்கப்படும் நிதியை திறமையான முறையில் பயன்படுத்தி பணிகளை விரைவுபடுத்துமாறு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கேட்டுக் கொண்டார். மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் / பயன்பாட்டு சான்றிதழை வழங்குவதுடன், பயன்படுத்தப்படாத நிதியை திருப்பி ஒப்படைப்பதை உறுதி செய்யுமாறும் மாநில / யூனியன் பிரதேச அரசுகளை அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெருந்தொற்று பாதிப்பு / பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ளும் விதமாக சுகாதார அமைப்புகளை தயார்ப்படுத்துவதுடன், தொடக்க நிலை, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சைகளுக்கும் தேவையான கட்டமைப்பை உருவாக்க 2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு பிரதமரின் ஆபிம் திட்டத்தின்கீழ், ரூ.64,180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1834787

***************



(Release ID: 1834891) Visitor Counter : 219