வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாட்டின் மையப்புள்ளியாக இந்தியா திகழ்ந்தது : திரு பியூஷ் கோயல்
Posted On:
17 JUN 2022 2:17PM by PIB Chennai
நமது விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு எதிரான வலுவான உலகளாவிய பிரச்சாரம் ஒரு பக்கம் இருந்தபோதிலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு உலக வர்த்தக அமைப்பில் இந்தியா சாதகமான முடிவைப் பெற முடிந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு,பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் அளவிலான மாநாடு ஜெனிவாவில் இன்று நிறைவு பெற்றது. இந்த மாநாடு "முடிவு சார்ந்த" வெற்றியைப் பெற்றுள்ளதாக கூறிய திரு கோயல், பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கான முன்னுரிமைப் பிரச்சினைகளை உலகிற்கு முன்வைப்பதில் இந்தியக் குழு 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்றார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த சில ஆண்டுகளாக வளர்த்து வந்த உலகத்துடனான வலுவான இந்திய உறவுகளை, இந்த மாநாட்டில் இந்திய தூதுக்குழு பயன்படுத்தியிருப்பதாக திரு கோயல் தெரிவித்தார்.
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை மாநாட்டின் ஆரம்ப கட்டத்தில் சில நாடுகள் தவறான பிரச்சாரத்தை உருவாக்க முயற்சி செய்தது என்றும், அந்த விஷயத்தில் இந்தியா பிடிவாதமாக இருந்தது என்றும் ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய திரு கோயல் கூறினார்.
மாநாட்டின் மையப்புள்ளியாக இந்தியா திகழ்ந்தது 135 கோடி இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும் என்று அவர் கூறினார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு உலக வர்த்தக அமைப்பு நிறுவப்பட்டபோதும், உருகுவே பேச்சுவார்த்தைகளின் போதும் இந்தியாவும், வளரும் நாடுகளும் சில சமரச முடிவுகளை ஏற்றுக்கொண்டதை ஒப்புக்கொண்ட திரு கோயல், சுற்றுச்சூழல், ஸ்டார்ட்அப் என பல்வேறு விஷயங்களில் பயப்படுவதை விட, இந்தியா இன்று முன்னணியில் நிற்கிறது என்றார். எம்எஸ்எம்இகள் அல்லது பாலின சமத்துவம். இது புதிய இந்தியாவின் நம்பிக்கையின் விளைவு. இந்தியா ஒருமித்த கருத்தை உருவாக்கி, உலகிற்கு ஏற்ற முடிவைப் பெற முடியும், என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1834766
***************
(Release ID: 1834812)
Visitor Counter : 317