புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

விடுதலை பெருநாளை கொண்டாடும் வகையில் 75 நாட்களுக்கு 75 கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங்

Posted On: 16 JUN 2022 7:01PM by PIB Chennai

பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங் தலைமையில், வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் நாள் – 2022 கொண்டாட்டம் குறித்து புதுதில்லி பிரித்வி பவனில் ஆலோசனை செய்யப்பட்டது.

கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் நாள் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 3 வது சனிக்கிழமைகளில் கொண்டாடப்படுவதாகவும், இந்த வருடம் செப்டம்பர் 17 ஆம் தேதி, தூய்மை, கடற்கரை பாதுகாப்பு, சுற்றுசூழல் மற்றும் காலநிலை பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முன்னோடியாக திகழும் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் அன்று வர உள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்

மேலும், சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் இந்த நாள் வர உள்ளது என தெரிவித்த மத்திய அமைச்சர், 2022 ஜூலை 3 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை 75 நாட்களுக்கு நாட்டில் உள்ள 75 கடற்கரைகள் சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளதாக கூறினார்.

இந்த ஆண்டு நடக்க உள்ள இந்த நாளின் தனித்துவம் பற்றி பேசிய அமைச்சர், அதிகம் பேர் பங்கேற்க உள்ள கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வாக இது இருக்கும் என தெரிவித்தார். ’தூய்மையான கடல், பாதுகாப்பான கடல் என்ற செய்தியை கடலோரப் பகுதி மட்டுமல்லாது நாடு முழுவதும் எடுத்துச் செல்ல பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என கூறினார்.

  கடலோரம் இல்லாத பகுதிகளிலும் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்ற துறைகள் / பிரிவுகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மூலம் கடற்கரை தூய்மை நாள் செய்தியை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் திட்டமிட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நாளுக்கான லோகோ மற்றும் முழக்கத்தையும் பார்வையிட்ட அவர், நிகழ்வுக்கு முந்தைய செயல்களில் கவன செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

வரும் ஜூலை 3 ஆம் தேதி இது குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்வும், பத்திரிகையாளர் சந்திப்பும் நடக்க உள்ளது. 1500 டன் குப்பைகளை அகற்றி கடற்கரையை சுத்தமாக வைத்திருத்தலே ஆகும்.

இந்த கூட்டத்தில் இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குனர், புவி அறிவியல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

********



(Release ID: 1834617) Visitor Counter : 197