எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் சூரத்தில் முதன் முதலாக இரும்புக் கசடால் அமைக்கப்பட்ட 6 வழி நெடுஞ்சாலையை எஃகு துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்

Posted On: 15 JUN 2022 4:58PM by PIB Chennai

மத்திய எஃகு துறை அமைச்சர் திரு. ராம்சந்திர பிரசாத் சிங் இன்று குஜராத் மாநிலம் சூரத்தில், நகரத்துடன் துறைமுகத்தை இணைக்கும், முதன் முதலாக இரும்புக் கசடால் அமைக்கப்பட்ட 6 வழி நெடுஞ்சாலையை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர், அனைத்து கழிவுகளையும் செல்வமாக மாற்றும் ஆதார திறன்கொண்ட சுற்றுப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

     2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரதமர் ஆற்றிய உரையை நினைவு கூர்ந்த அமைச்சர் திரு சிங், சுற்றுப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.  சுற்றுப் பொருளாதாரம் இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியமானது என்றும் அதனை நமது வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டியது கட்டாயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  100% எஃகு கழிவைக் கொண்டு இந்தச் சாலை அமைக்கப்பட்டுள்ளதானது, எஃகு தொழிற்சாலைகளின் நிலைத் தன்மையை முன்னேற்ற உதவும் என்று கூறினார்.  இந்தப் பொருளைக் கொண்டு சாலை அமைப்பதால், அதன் உறுதித் தன்மை நீடிப்பதுடன், சாலை அமைப்பதற்கான செலவையும் வெகுவாகக் குறைக்கும் என்று அவர் கூறினார். இந்த அனுபவத்தை பயன்படுத்தி சாலை அமைப்பதில் இரும்பு கசடுகளை உபயோகிக் வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

     தமது அமைச்சகம் இதுபோன்ற பொருட்களை கொண்டு சாலை அமைப்பது வேளாண்மையில் உரங்களுக்கு பதிலாக மண் வளத்தை பாதுகாப்பது, ரயில்வேயில் கான்கிரிட் கட்டைகளுக்கு மாற்று, பசுமை சிமெண்ட் தயாரிப்பு ஆகியவை பற்றிய வாய்ப்புகளை ஆய்வு செய்துவருவதாக அமைச்சர் தெரிவித்தார்.  ஏற்கனவே தமது அமைச்சகம் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். 

*****


(Release ID: 1834299) Visitor Counter : 234