பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

கொச்சி துறைமுக ஆணையம் மூன்று வருட காலத்துக்கான கடன்களை திருப்பி செலுத்த காலக்கெடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 14 JUN 2022 4:18PM by PIB Chennai

கொச்சித் துறைமுக ஆணையம் நிலுவையில் வைத்துள்ள கடன் தொகையை திருப்பி செலுத்த (2020-21, 2021-22, 2022-23) ஏதுவாக பிரதமர் மோடி தலைமையிலான, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு,  காலக்கெடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கொச்சித் துறைமுக ஆணையம் இந்திய அரசாங்கத்துக்கு ரூ.446.83 கோடி ரூபாய் கடனை நிலுவையில் வைத்துள்ளது.

2018-19-ம் ஆண்டு முதல் 10 தவணைகளில் இந்தத் தொகை திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். ஆனால், கொச்சித் துறைமுக ஆணையம், 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையை மட்டுமே திருப்பிச் செலுத்தியுள்ளது. 2020-21-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக துறைமுகப் போக்குவரத்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதால், 2020-21, 2021-22-ம் ஆண்டுக்கான கடன் தொகையை கொச்சித் துறைமுகத்தால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.

இந்தத் துறைமுகம், கடந்த 2021 நவம்பர் முதல், இந்திய பெருந்துறைமுகங்கள் ஆணையம் -2021- சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்திய அரசிடம் கொச்சித் துறைமுகம் வாங்கிய கடனுக்கான அபராத வட்டியை தள்ளுபடி செய்யும் முன்மொழிவுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த 24.08.2016-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கியது.  

***************


(Release ID: 1833984) Visitor Counter : 184