பிரதமர் அலுவலகம்

2022-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துறைக்கான ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் குறித்து இணையவழியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 24 FEB 2022 2:38PM by PIB Chennai

 வணக்கம்..

அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, மாநில அரசுகளின் பிரதிநிதிகளே, தொழில்துறை மற்றும் கல்வித்துறையை சேர்ந்த அனைத்து நண்பர்களே, கிரிஷ் விக்யான் கேந்திராவுடன் இணைந்துள்ள விவசாயிகளே, சகோதர, சகோதரிகளே..

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான், பிரதமரின் கிசான் விகாஸ் தொடங்கப்பட்டது என்பது மகிழ்ச்சிகரமான.. தற்செயல் நிகழ்வு. இந்த திட்டம் தற்போது நாட்டிலுள்ள சிறு விவசாயிகளுக்கு பெரும் ஆதரவு திட்டமாக உருவெடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், இதுவரை 11.45 கோடி விவசாயிகளுக்கு சுமார் 1.45 லட்சம் கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. 10 -12 கோடி விவசாயிகளுடைய வங்கி கணக்குகளில்நேரடி பணப்பரிமாற்றம் மூலம் பணம் செலுத்தப்படுகிறது. இது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையளிக்கும் விஷயம்.

நண்பர்களே,

கடந்த ஏழு ஆண்டுகளில், விவசாய விதைகளை வழங்குதல், விவசாய சந்தைகளை உறுதி செய்தல் உள்ளிட்டவைகளில் பல புதிய அமைப்புகளை உருவாக்கி, பழைய நடைமுறைகளை மேம்படுத்தியுள்ளோம். கடந்த ஆறு ஆண்டுகளில், நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி பன்மடங்கு அதிகரித்துள்ளது. விவசாயக் கடன்களும் கடந்த ஏழு ஆண்டுகளில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. கொவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தலிலும், ஆக்கப்பூர்வமான சிறப்பு இயக்கங்கள் மூலம் 3 கோடி சிறு விவசாயிகளை கே.சி.சி. திட்டத்தில் இணைத்துள்ளோம்கால்நடை வளர்ப்போர் மற்றும் மீன்வளத்துறை விவசாயிகளுக்கும் இது விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், வளர்ந்து வரும் நுண்ணீர் பாசன திட்டம் மூலம் சிறு விவசாயிகளும் பயனடைய வழி செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இந்த முயற்சிகளின் விளைவாக, விவசாயிகள் ஆண்டுதோறும் உற்பத்தியில் சாதனை படைத்து வருகின்றனர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் இயற்கை விவசாயப் பொருட்களின் சந்தை 11 கோடி ரூபாயாக உள்ளது. இயற்கை விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியும் கடந்த ஆறு ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 7 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800761

 

***************



(Release ID: 1833755) Visitor Counter : 149