பிரதமர் அலுவலகம்

அகமதாபாதின் போபலில் இன்-ஸ்பேஸ் தலைமையகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

இன்-ஸ்பேஸ் தொடங்கப்பட்டிருப்பது இந்திய விண்வெளித் தொழில்துறைக்கு ‘இந்த விண்வெளியை நோக்குங்கள்’ தருணமாகும்

“விண்வெளிக்கு இன்-ஸ்பேஸ், வேகத்திற்கு இன்-ஸ்பேஸ், தனித்துவத்திற்கு இன்-ஸ்பேஸ்”

“தனியார் துறையினர் இனியும் ஒரு வியாபாரியாக மட்டுமின்றி, விண்வெளித்துறையில் மாபெரும் வெற்றியாளர்களாக பங்களிப்பை வழங்குவார்கள்”

“அரசு விண்வெளி நிறுவனங்களி்ன் வலிமையும், இந்தியாவின் தனியார் துறையினரின் விருப்பமும் ஒன்றிணைந்தால், வானம் கூட எல்லையாக இருக்க முடியாது”

“அரசின் வழியாகத்தான் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என நமது இளைஞர்களுக்கு தற்போது நிபந்தனை விதிக்க முடியாது”

“நமது விண்வெளி பயணங்கள் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து நாட்டு மக்கள் அனைவரின் இயக்கமாக மாறியுள்ளது”

“முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திய இஸ்ரோ பாராட்டுக்குரியது”

“இந்தியாவின் விண்வெளித்திட்டம் தற்சார்பு இந்தியா இயக்கத்தின் மாபெரும் அடையாளம்”

“சர்வதேச அளவில் விண்வெளித்தொழிலில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதுடன், இதில் தனியார் துறை பெருமளவு பங்கேற்க வேண்டும்”

“புதிய இந்திய விண்வெளிக் கொள்கையை இந்தியா உருவாக்கி

Posted On: 10 JUN 2022 6:22PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (IN-SPACe) தலைமையகத்தை அகமதாபாதின் போபலில்  இன்று  திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, விண்வெளி சார்ந்த பயன்பாடுகள் மற்றும் சேவைத்துறையில் இன்-ஸ்பேஸ் மற்றும் தனியார் நிறுவனங்கள் பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு  ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. விண்வெளித்துறையில் தனியார் துறையினரை ஊக்குவிப்பது விண்வெளித்துறைக்கு பெரும் உத்வேகம் அளிப்பதுடன், இந்தியாவில் உள்ள திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கான புதிய வாய்ப்புகளை வழங்கும். மத்திய உள்துறை  அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல், மற்றும் விண்வெளித் தொழில்துறையினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், 21ஆம் நூற்றாண்டில் நவீன இந்தியாவின் வளர்ச்சிப்பயணத்தில்,  மிகச் சிறந்த அத்தியாயம்  இணைக்கப்பட்டுள்ளது, இன்-ஸ்பேஸ் தலைமையகத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் என்றும்  தெரிவித்தார். இன்-ஸ்பேஸ் தொடங்கப்பட்டிருப்பது  பல்வேறு வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளுக்கு முன்னோட்டமாக அமைவதுடன், இந்திய விண்வெளித் தொழில்துறைக்கு  ‘இந்த விண்வெளியை நோக்குங்கள்தருணமாக  அமையும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.  “இந்திய இளைஞர்கள்,  தங்களது திறமையை இந்தியாவின் சிறந்த சிந்தனையாளர்களிடம் வெளிப்படுத்த இன்-ஸ்பேஸ் ஒரு வாய்ப்பை அளிக்கும். அரசுத்துறையாக இருந்தாலும், தனியார் துறையில் பணியாற்றினாலும் அனைவருக்கும் சிறந்த வாய்ப்புகளை இன்-ஸ்பேஸ் உருவாக்கும்” என்றும் அவர் கூறினார். மேலும், “இந்தியாவின் விண்வெளித் தொழில்துறையில், புரட்சி ஏற்படுத்தும் திறன் இன்-ஸ்பேஸ்-க்கு உள்ளது. எனவே, ‘இந்த விண்வெளியை நோக்குங்கள்’ என்று கூற நான் விரும்புகிறேன்’. விண்வெளிக்கு இன்-ஸ்பேஸ், வேகத்திற்கு இன்-ஸ்பேஸ், தனித்துவத்திற்கு இன்-ஸ்பேஸ்.

விண்வெளித் தொழில்துறையில் தனியார் துறையினர், நீண்ட காலமாக ஒரு வியாபாரியாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்தனர், இந்த நடைமுறை தொழில்துறையில் தனியார் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கு எப்போதும் தடையாக இருந்து வந்தது என்றும் பிரதமர் கூறினார்.   பெரும் சிந்தனைகளால் மட்டுமே வெற்றியாளர்களை உருவாக்க முடியும் என்றும் பிரதமர்  தெரிவித்தார். விண்வெளித்துறையில் சீ்ர்திருத்தங்களை ஏற்படுத்தி, அனைத்துக் கட்டுபாடுகளிலிருந்து விடுவித்து, இன்-ஸ்பேஸ் வாயிலாக தனியார் துறையினருக்கு ஆதரவளிப்பதன் மூலம், வெற்றியாளர்களை உருவாக்குவதற்கான  மாபெரும் இயக்கத்தை நாடு இன்று தொடங்கியுள்ளது. தனியார் துறையினர் இனியும் ஒரு வியாபாரியாக மட்டுமின்றி, விண்வெளித்துறையில் மாபெரும் வெற்றியாளர்களாக பங்களிப்பை வழங்குவார்கள். அரசு விண்வெளி நிறுவனங்களி்ன் வலிமையும்இந்தியாவின் தனியார் துறையினரின் விருப்பமும் ஒன்றிணைந்தால், வானம் கூட எல்லையாக இருக்க முடியாது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

முந்தைய நடைமுறைகளில், இந்திய இளைஞர்கள், தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்திய இளைஞர்கள் புதுமை கண்டுப்பிடிப்புகளை உருவாக்குவதோடு, ஆற்றல் மற்றும் கண்டுபிடிப்பு உணர்வுகளையும் பெற்றுள்ளனர். முறைப்படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை மறந்து விட்டது நாட்டின் துரதிருஷ்டம். அரசின் வழியாகத்தான் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என நமது இளைஞர்களுக்கு தற்போது  நிபந்தனை  விதிக்க முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அது போன்ற கட்டுப்பாடுகளுக்கான சகாப்தம் முடிந்துவிட்டதாக கூறிய அவர், நமது இளைஞர்களின் வழியில் குறுக்கிட்ட அது போன்ற அனைத்து கட்டுப்பாடுகளையும்  அகற்றிவிட்டது. ராணுவத் தளவாட உற்பத்தி, நவீன ட்ரோன் கொள்கை, நில விண்வெளித்தரவு வழிகாட்டுதல்கள் போன்றவற்றில் தனியார் அனுமதிக்கப்பட்டிருப்பதைப் பட்டியலிட்ட அவர், தொலைதொடர்பு / தகவல் தொழில்நுட்பத் துறையினர்,  எங்கிருந்தும் பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருப்பதும், அரசின் நோக்கங்களுக்கு சிறந்த உதாராணமாகும் என்றார். இந்தியாவில் தனியார் துறையினர் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சூழலை அதிகரிப்பதே அரசின்  நோக்கம் என்றும், இதன் மூலம் தனியார் துறையினரும், வாழ்க்கையை எளிதாக்குவதில் சமபங்களிப்பை வழங்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

“ஒருவர் விஞ்ஞானியாகவோ அல்லது விவசாயி- தொழிலாளராகவோ இருந்தால், அறிவியலின் தொழில்நுட்பங்களை  புரிந்து கொள்ளவேண்டும் அல்லது புரிந்து கொள்ளாவிட்டாலோ,  அவை அனைத்தையும் கடந்துவிட்டாலோ, நமது விண்வெளி இயக்கம் நாட்டு மக்கள் அனைவரின் இயக்கமாக மாறும். சந்திரயான் இயக்கத்தின் போது, இந்தியாவின் இத்தகைய உணர்ச்சிபூர்வமான ஒற்றுமையை நம்மால் காணமுடிந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் விண்வெளித் தொழில்துறையில் 60க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் முன்னணியில் இருப்பது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். நாட்டின் விண்வெளித்துறையில் இத்தகைய  சிறப்பு வாய்ந்த மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக இஸ்ரோவுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். விண்வெளித் தொழில்துறையில் தனியாரை அனுமதித்திருப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், இதில் இஸ்ரோவின் அனுபவம் மற்றும் உறுதிப்பாடு பாராட்டுக்குரியது என்றார்.  இந்தியாவின் விண்வெளித்திட்டம் தற்சார்பு இந்தியா இயக்கத்தின் மாபெரும் அடையாளமாக திகழ்கிறது என்று அவர் கூறினார்.

சர்வதேச  அளவில் விண்வெளித்தொழிலில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதுடன், இதில் தனியார் துறை பெருமளவு பங்கேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

புதிய இந்திய விண்வெளிக் கொள்கையை இந்தியா உருவாக்கி வருகிறது, இந்தக் கொள்கை விண்வெளித்துறையில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பெரிய நிறுவனங்களின் மையமாக குஜராத் வேகமாக உருவெடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832969

************



(Release ID: 1833037) Visitor Counter : 188