வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கட்டமைப்பு திட்டமிடல் குழுவின் 20-வது கூட்டம்

Posted On: 09 JUN 2022 2:29PM by PIB Chennai

இணையதள திட்டமிடல் குழுவின் 20-வது கூட்டம் தில்லியில் உள்ள உத்யோக் பவனில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை (டிபிஐஐடி) பிரிவின் சிறப்புச் செயலாளர் திரு அம்ரீத் லால் மீனா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, மத்திய சிவில் விமானப்போக்குவரத்து, ரயில்வே உள்ளிட்ட அமைச்சகங்கள், தொலைத்தொடர்புத்துறை, நித்தி ஆயோக் ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொலைத்தொடர்புத் துறையில் அண்மையில் தொடங்கப்பட்ட விரைவு சக்தி சஞ்சார் இணையதள பக்கத்தை பாராட்டும் விதமாக, 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அந்த இணையதள பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.  தேசிய பெருந்திட்டத்துடன் இந்த இணையதள பக்கத்தை ஒருங்கிணைக்கும் செயலை துரிதப்படுத்துவதற்காக தொலைத்தொடர்புத் துறையின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு கூட்டத்தை தொலைத்தொடர்புத் துறை விரைவில் நடத்தவுள்ளது.

பல்வேறு நவீன உள்கட்டமைப்புகளை அதிகரித்து, சாலைகள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் விதமாக 100 சரக்கு முனையங்களை ரயில்வே அமைச்சகம் விரைவில் உருவாக்கவுள்ளது. இதற்கான இடங்களை தேர்வு செய்தல், காலக்கெடு மற்றும் திட்டமிடல் பணிகள் ஏற்கனவே நடந்து வருவதாக ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832566

***************


(Release ID: 1832639) Visitor Counter : 206