ஆயுஷ்
ஆயுஷ் நிறுவனம் என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்றுள்ளது
Posted On:
08 JUN 2022 1:40PM by PIB Chennai
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தின் உயிரி வேதியியல், மற்றும் நோயியல் துறை சிறந்த ஆய்வகப் பணிக்காக பரிசோதனை மற்றும் ஆய்வகத்திற்கான தேசிய அங்கீகார வாரிய சான்றிதழைப் பெற்றுள்ளது (என்ஏபிஎல்). இந்த மையம் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் கீழ் உள்ள நிறுவனமாகும். இந்த நிறுவனம் தான், ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் கீழ் உள்ள நிறுவனங்களில் இந்த சான்றிதழைப் பெறும் முதல் நிறுவனமாகும். இதையடுத்து நேற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில், என்ஏபிஎல் அங்கீகார ஆய்வகத்தை ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் தலைமை இயக்குநர், பேராசிரியர் ரபிநாராயண் ஆச்சார்யா நேற்று தொடங்கிவைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832059
-----
(Release ID: 1832158)
Visitor Counter : 194