பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வியட்நாம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜென்ரல் பான் வான் யாங்குடன் ஹனோயில் இருதரப்பு பேச்சு நடத்தினார்
प्रविष्टि तिथि:
08 JUN 2022 10:58AM by PIB Chennai
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வியட்நாம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜென்ரல் பான் வான் யாங்குடன் ஹனோயில் இன்று இருதரப்பு பேச்சு நடத்தினார். அப்போது இருதரப்பு பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். இந்தியா-வியட்நாம் பாதுகாப்பு ஒத்துழைப்பு 2030 தொடர்பான கூட்டுத் தொலைநோக்கு அறிக்கையில் இருநாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.
வியட்நாம் பாதுகாப்புத்துறைக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியை இந்தியா வழங்குவதற்காக இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கும் இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் அளித்தனர். வியட்நாம் பாதுகாப்பு படையினருக்கான விமானப்படை அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கு இந்தியா சார்பில் உதவி செய்யப்படும் என்று திரு ராஜ்நாத் சி்ங் அறிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1831981
***************
(रिलीज़ आईडी: 1832002)
आगंतुक पटल : 317