கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் ‘ஆயுஷ்’ நம்பிக்கை பெற்றுள்ளது – மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால்
प्रविष्टि तिथि:
07 JUN 2022 2:51PM by PIB Chennai
இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் ‘ஆயுஷ்’ நம்பிக்கை பெற்றுள்ளதாக மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் கூறியுள்ளார்.
பிரதமர் திரு.நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனையை விளக்கும் வகையில் டிடி நியூஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக மையத்தை உலக சுகாதார அமைப்பின் உதவி மூலம் ஜாம்நகரில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் யோகக் கலைக்கு விஷ்வகுருவாக இந்தியா எப்போதும் திகழ்கிறது என்றும் தெரிவித்தார்.
பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள துறைமுகங்கள், நீர்வழித்தடங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இதன் மூலமாக துறைமுகங்களில் சரக்குகளை கையாளும் திறன் மற்றும் அளவு அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1831816
***************
(Release ID: 1831816)
(रिलीज़ आईडी: 1831846)
आगंतुक पटल : 182