ரெயில்வே அமைச்சகம்
இந்திய ரயில்வே உலக சுற்றுச்சூழல் தினத்தை பொருத்தமான முறையில் கொண்டாடுகிறது
Posted On:
05 JUN 2022 4:18PM by PIB Chennai
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்திற்கான பிரச்சார முழக்கம் "ஒரே ஒரு பூமி" என்பது "இயற்கையுடன் இணக்கமாக வாழ்வது" என்பதை மையமாகக் கொண்டது . பூமி அன்னை நமது உறைவிடமாகும், மேலும் இணக்கமான சூழ்நிலை நிலவுவதற்கு, அதிகரித்து வரும் மாசுபாட்டிலிருந்து அதைப் பாதுகாக்க ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டையும் போலவே, இந்திய ரயில்வே இந்த ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப பொருத்தமான முறையில் ஜூன் 5, 2022 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடுகிறது.
ரயில்வே என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த மொத்தப் போக்குவரத்து அமைப்பாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய முயற்சிகளை ரயில்வே தொடர்ந்து எடுத்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1831317
***************
(Release ID: 1831344)