தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

செயற்கை நுண்ணறிவு புரட்சி தொடர்ந்து வளர்ச்சி அடையும், இத்துறையில் உலகில் அடுத்து 10 ஆண்டுகளில் இந்தியா முக்கிய கேந்திரமாக விளங்கும்: திரு தேவ்சிங் சவுகான்

Posted On: 02 JUN 2022 11:38AM by PIB Chennai

தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர்  திரு தேவ்சிங் சவுகான் கலந்துகொண்டார். ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் சர்வதேச தகவல் தொடர்புத்துறை யூனியன் இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. அப்போது பேசிய அவர், தகவல் தொடர்புத்துறை கட்டமைப்பின் வளர்ச்சியாக இந்தியாவில் 6 லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழை கேபிள்கள் வழியாக இணைக்கப்பட்டு வருவதாக கூறினார்.

பொருளாதாரத்தில் விரைவாக வளர்ச்சியடைந்து வரும் நாடாக இந்திய திகழ்கிறது என்று கூறிய அவர்,  செயற்கை நுண்ணறிவில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு புரட்சி தொடர்ந்து வளர்ச்சிய அடையும், இத்துறையில் உலகில் அடுத்து 10 ஆண்டுகளில் இந்தியா முக்கிய கேந்திரமாக விளங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இம்மாநாட்டிற்கு இடையே ஜப்பான் நாட்டு  தகவல் தொடர்புத்துறை அமைச்சருடன் இரு தரப்பு பேச்சுகள் நடைபெற்றது. அப்போது இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையின் முன்னெடுப்பில் ஜப்பான் நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் திரு தேவ்சிங் சவுகான் வலியுறுத்தினார்.

உலகின் தகவல் தொடர்புத்துறையின் கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். இத்துறையின் வளர்ச்சிக்காக கடந்த ஆண்டு இந்திய அரசு பல்வேறு சீர்த்திருத்தங்களை அறிவித்ததாக அவர் கூறினார்.

ஈரான் நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் திரு இசா ஜரபோருடன் இருதரப்பு பேச்சு நடத்திய அமைச்சர் திரு தேவ்சிங் சவுகான், கோவின் இணையதளம் குறித்த தகவல்களை  பகிர்ந்து கொள்ள இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1830362

***************



(Release ID: 1830471) Visitor Counter : 151