கூட்டுறவு அமைச்சகம்

அரசு இ-சந்தை தளத்தில் கூட்டுறவு சங்கங்கள்: வெளிப்படைத்தன்மை, பயன்பாடு மற்றும் குறைந்த செலவிலான கொள்முதல் முறையை நோக்கிய நடவடிக்கை

Posted On: 02 JUN 2022 10:19AM by PIB Chennai

தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அரசு இ-சந்தை தளத்தில் கூட்டுறவு சங்கங்களை ‘வாங்குவோராக’ பதிவு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒரே தளத்தில் 45 லட்சத்திற்கும் அதிகமான வியாபாரிகளை எளிதாக அடைவதற்கும், வெளிப்படைத்தன்மை, பயன்பாடு மற்றும் குறைந்த செலவிலான கொள்முதல் முறையை அடைவதற்கும், கூட்டுறவு சங்கங்களுக்கு உதவும்.

மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா தலைமையின் கீழ் கூட்டுறவு அமைச்சகம் பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்கள், மாநில கூட்டுறவு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றை அவற்றின் உறுப்பினர்கள் பயனடைவதற்காக அரசு இ-சந்தை தளத்தில் இணைக்க, ஊக்கப்படுத்தியுள்ளது. இந்த தளத்தில் இணைவதன் மூலம் கூட்டுறவு சங்கங்கள் மேலும், மேலும் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1830333  

***************



(Release ID: 1830464) Visitor Counter : 182