வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

கோதுமை ஏற்றுமதி பதிவு செயல்பாட்டில் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய அனைத்து ஆவணங்களையும் நேரடியாக சரி பார்க்க வேண்டும் - அரசு உத்தரவு

Posted On: 31 MAY 2022 2:12PM by PIB Chennai

வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் பதிவுச் சான்றிதழ்களை வழங்குவதற்கு முன்பாக, கோதுமை ஏற்றுமதி செய்வோரின் அனைத்து ஆவணங்களையும் நேரடியாக சரி பார்க்க வேண்டும் என பிராந்திய அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு, முறையற்ற ஆவணங்களின் அடிப்படையில் பதிவுச்சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகளை தவிர்ப்பதற்காக, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட அல்லது பயன்பாட்டில் உள்ள கடன் உத்தரவாத கடிதங்களை பிராந்திய அதிகாரிகள் நேரடியாக கண்காணிப்பார்கள் என்றும், தேவைப்படும் இடங்களில் இவ்வாறு கண்காணிப்பதற்கு தொழில்முறை கண்காணிப்பாளரின் உதவியை பெறலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை நிர்வகிப்பதற்காகவும், உலக சந்தையில் கோதுமைக்கு ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படக் கூடிய அண்டை நாடுகளின் தேவைகளை ஆதரிப்பதற்காகவும், முன்னதாக 2022 மே 13-ம் தேதி கோதுமை ஏற்றுமதியை மத்திய அரசு கட்டுப்படுத்தியதால், கோதுமை பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட்டது.

***************



(Release ID: 1829811) Visitor Counter : 154