எரிசக்தி அமைச்சகம்
சக்தி பி (viii) (a) சாளரத்தின் கீழ் மின்சார உற்பத்தி நிலையங்களுக்குத் தகுதியான உள்நாட்டு நிலக்கரியின் அளவைத் தீர்மானிக்க மத்திய மின்சார ஆணையத்திற்கு எரிசக்தி அமைச்சகம் உத்தரவு
प्रविष्टि तिथि:
29 MAY 2022 1:21PM by PIB Chennai
சக்தி பி (viii) (a) சாளரத்தின் கீழ் 10% இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைக் கணக்கில்கொண்டு, எரிசக்தி அடிப்படையில் உள்நாட்டு நிலக்கரியின் 15%க்கு சமமான 10% இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி நிலையங்களுக்குத் தகுதியான உள்நாட்டு நிலக்கரியின் அளவைத் தீர்மானிக்க மத்திய மின்சார ஆணையத்திற்கு எரிசக்தி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சக்தி பி (viii) (a) என்பது நிலக்கரியை ஏலம் எடுப்பதற்கும், இந்த நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், குறுகியகால எரிசக்தி வாங்கும் ஒப்பந்தத்திற்கான டீப் தளம் அல்லது நேரடி மின்சார வர்த்தக சந்தையின் கீழ் நிலக்கரியை பரிமாற்றம் செய்யும் திறன் கொண்ட மின்சார உற்பத்தி நிலையங்களுக்கான ஓர் சாளரமாகும்.
அத்தகைய ஆலைகளுக்கு, ஜூன் 15, 2022 தொடங்கி, மார்ச் 31 2023 வரையிலான காலகட்டத்தில் உற்பத்திக்காக 10% எடையுடன் கட்டாய கலவையின் அடிப்படையில், சக்தி பி (viii) (a) சாளரத்தின் கீழ் வாங்கப்பட்ட நிலக்கரியின் அளவைக் கணக்கிடுமாறு மத்திய மின்சார ஆணையத்திற்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆலைகளுக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியைக் கொள்முதல் செய்ய சுமார் 3 வாரங்கள் அவகாசம் வழங்கப்படும்.
மின்சார தேவையில் அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு நிலக்கரி நிறுவனங்களிலிருந்து தேவைக்கு ஏற்ற வகையில் நிலக்கரி விநியோகம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மின்சார உற்பத்திக்காக 10% இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைக் கலக்குமாறு அனைத்து மின்சார உற்பத்தி நிலையங்களுக்கும் 28.04.2022 அன்று எரிசக்தி அமைச்சகம் அறிவுறுத்தியது. உள்நாட்டு நிலக்கரி விநியோகத்தை அதிகரிப்பதற்காக இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1829145
***************
(रिलीज़ आईडी: 1829173)
आगंतुक पटल : 234