பிரதமர் அலுவலகம்

டெஃப்லிம்பிக்சில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் தமது இல்லத்தில் உரையாடினார்

Posted On: 21 MAY 2022 9:18PM by PIB Chennai

டெஃப்லிம்பிக்சில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன்  பிரதமர்  தமது இல்லத்தில் உரையாடினார்.  வீரர்களின் அனுபவங்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். அப்போது ரோஹித் என்ற வீரர் தாம் 1997ஆம் ஆண்டு விளையாடத் தொடங்கிய போது, காது கேளாத குறைபாடு இல்லாதவர்களுடன் போட்டியிட்டதாக கூறினார். அக்காலக் கட்டத்தில் காது கேளாதோர் விளையாடவில்லை என்று தெரிவித்த அவர், எந்தவித ஆதரவும் தமக்கு கிடைக்கவில்லை என்று கூறினார். ஒரே ஆறுதலாக தமது தந்தை  ஒத்துழைப்பு அளித்ததாக அவர் தெரிவித்தார். பேட்மிண்டன் போட்டி தமக்கு மிகுந்த விருப்பமான விளையாட்டு என்று அவர் கூறினார்.

அப்போது பேசிய பிரதமர்,  நாங்கள்அனைவரும் உங்களுடன் இருப்பதாகவும் தலைமைப் பண்பு மற்றும் தன்னம்பிக்கை உங்களுக்கு உள்ளதாகவும் என்று நாங்கள் நம்புவதாகத் தெரிவித்தார். நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு மிகப் பெரிய உத்வேகம் அளிப்பவர்களாக நீங்கள் திகழ்கிறீர்கள் என்று பிரதமர் கூறினார்.

பிரதமரிடம் பேசிய மல்யுத்த வீரர் வீரேந்திர சிங், குழந்தைப் பருவத்திலிருந்தே தாம் விளையாட்டில் பங்கேற்க பெற்றோர் ஆதரவளித்ததே இந்த அளவிற்கு வரமுடிந்ததற்கு காரணம் என்று  தெரிவித்தார். கடின உழைப்பு வீண் போகாது என்று கூறிய அவர், பயிற்சியில், மிகுந்த கவனம் செலுத்தியதாகக் கூறினர்.  மற்ற மல்யுத்த வீரர்களின் விளையாட்டை பார்த்து அவர்களுடைய உத்தியைக் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சுடும் வீரர் தனுஷ் பேசும் போது யோகா, தியானம் ஆகியவை தமக்கு உதவியதாகவும் பிரதமரிடம் கூறினார். துப்பாக்கிச் சுடும் வீராங்கனை பிரியேஷா தேஷ்முக், டென்னிஸ் வீராங்கனை ஜாஃப்ரின் ஷேக் உள்ளிட்டோரும் தங்களது அனுபவங்களை பிரதமரிடம் பகிர்ந்து கொண்டனர்.

விடுதலைப் பெருவிழாவைக் கொண்டாடி வரும் வேளையில், தாய்நாட்டிற்காக பதக்கம் வென்ற  உங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். குடும்ப உறுப்பினர்கள் பெற்றோர், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவரும் உங்களுக்காக பங்களிப்பு செய்துள்ளனர்.  என்று அவர்களிடம் குறிப்பிட்டார்.   நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களுக்கும் நீங்கள் உத்வேகம் அளிப்பவராக திகழ்கிறீர்கள் என்று பிரதமர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1827247

***************



(Release ID: 1828293) Visitor Counter : 130