பிரதமர் அலுவலகம்

இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் செழுமைக்கான அறிக்கை

Posted On: 24 MAY 2022 3:42PM by PIB Chennai

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஆஸ்திரேலியா, புருனே தாருஸ்ஸலாம், இந்தோனேசியா, ஜப்பான், கொரியா குடியரசு, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளான நாம் பிராந்திய பொருளாதாரத்தின் செழுமையையும், நம்பகத் தன்மையையும் ஒப்புகொள்வோம்.  நீடித்த பொருளாதார வளர்ச்சியை அடைவதற்காக தடையில்லா வெளிப்படையான அனைத்தையும் உள்ளடக்கிய அம்சங்களை நாம் பகிர்ந்து கொள்வோம். பொருளாதார போட்டியை வலுப்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை கொவிட் பெருந்தொற்று உணர்த்தியுள்ளது.  நமது தொழிலாளர்கள், பெண்கள், நடுத்தர மற்றும் சிறு தொழில்முனைவோர் மற்றும் அடித்தட்டு மக்களின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எதிர்கால பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இந்தோ-பசிபிக் பொருளாதார செழுமைக்கான கட்டமைப்பை நாம் உருவாக்கியுள்ளோம்.  இதன் மூலம் இப்பிராந்தியத்தில் நாம் ஒத்துழைப்பு, ஸ்திரதன்மை, செழுமை, வளர்ச்சி, அமைதி ஆகியவற்றை  அளிப்பதை நோக்கமாக கொள்ள வேண்டும்.  இப்பிராந்தியத்தின் நோக்கம், ஆர்வம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதற்காக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நட்பு நாடுகளையும் அழைக்கிறோம்.  விநியோக சங்கிலியில் மேலும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவற்காக வெளிப்படை தன்மை, பன்முக தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த உறுதி செய்வோம்.

நமது பொருளாதாரங்களிடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் வாய்ப்புகளை அதிகரிக்கவும், ஒருங்கிணைந்த சந்தைகளில் தொழிலாளர்கள், நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும், தரநிலைகளை மேம்படுத்தவும் உகந்த சூழல்களை இணைந்து உருவாக்க நாம் எதிர்நோக்கியுள்ளோம்.

***



(Release ID: 1828173) Visitor Counter : 124