சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் சுகாதாரப் பதிவுகளை நிர்வகிக்க, ABHA மொபைல் செயலியை தேசிய சுகாதார ஆணையம் புதுப்பித்துள்ளது.
Posted On:
24 MAY 2022 10:30AM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் முதன்மைத் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA) என்ற மொபைல் செயலியை தேசிய சுகாதார ஆணையம் தற்போது புதுப்பித்து மேம்படுத்தப்படுத்தியுள்ளது.
முன்பு NDHM ஹெல்த் ரெக்கார்ட்ஸ் ஆப் (APP) என அழைக்கப்படும் ABHA செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
ABHA செயலியின் புதுப்பிக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பில் பல்வேறு புதிய வசதிகள் உள்ளதால் தனிநபர்கள் குறிப்பாக புதிய பயனாளர்கள் தங்கள் உடல்நலப் பதிவுகளை எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தும் அணுகக்கூடிய செயல்பாடுகளைச் சேர்த்துள்ளனர். ஏற்கனவே உள்ள ABHA ஆப்-ல் பயனர்கள் தங்களின் முந்தைய ஆப்–ல் உள்ள பதிப்புகளையும் தற்போதைய புதிய பதிப்பில் புதுப்பித்துக்கொள்ளலாம்.
ABHA மொபைல் செயலி தனிநபருக்கான முகவரியை (username@abdm) உருவாக்க உதவுகிறது, இது 14 இலக்கத் தோராயமாக உருவாக்கப்பட்ட ABHA எண்ணுடன் இணைக்கப்படும் பயனர் பெயரை எளிதாக நினைவில் வைக்கும். மொபைல் பயன்பாட்டுப் பயனர்கள் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தில் இணக்கமான சுகாதார வசதியில் உருவாக்கப்பட்ட அவர்களின் உடல்நலப் பதிவுகளை இணைக்கவும் மற்றும் அவர்களின் ஸ்மார்ட்போன்களில் அவற்றைப் பார்க்கவும் உதவுகிறது. ABDM நெட்வொர்க் மூலம் ஒரு தனிநபரின் ஒப்புதலுக்குப் பிறகு, நோய் கண்டறிதல் அறிக்கைகள், மருந்துச் சீட்டுகள், CoWIN தடுப்பூசிச் சான்றிதழ் போன்ற டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகளைப் பகிர்வதோடு, ABDM இணக்கமான ஹெல்த் லாக்கர்களில் உடல் ஆரோக்கியப் பதிவுகளை சுயமாகப் பதிவேற்றவும் பயன்பாடு அனுமதிக்கிறது.
இது தவிர, ABHA மொபைல் பயன்பாட்டில் சுயவிவரத்தைத் திருத்துதல், இணைப்பு மற்றும் ABHA முகவரியுடன் ABHA எண்ணை (14 இலக்கங்கள்) நீக்குதல் போன்ற புதிய செயல்பாடுகள் உள்ளன. முக அங்கீகாரம் / கைரேகை / பயோமெட்ரிக் மூலம் உள்நுழைதல் மற்றும் எக்ஸ்பிரஸ் பதிவுக்கான ABDM இணக்க வசதியின் கவுண்டரில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் திறன் போன்ற பிற செயல்பாடுகளும் விரைவில் வெளியிடப்படும்.
ABHA மொபைல் செயலியைப் பற்றி தேசிய சுகாதார ஆணையத்தின் (NHA) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர்.எஸ். சர்மா கூறியதாவது: குடிமக்கள் தங்கள் நீளமான சுகாதாரப் பதிவுகளை உருவாக்க ABHA செயலி கருவியாக இருக்கும். நோயாளிகள் தங்களின் ABHA முகவரியின் உதவியுடன் அவர்களின் உடல்நலப் பதிவுகளை நொடிகளில் அணுகலாம், இது பல வழிகளில் அவர்களை மேம்படுத்தும். இது அவர்களின் சுகாதார வரலாற்றை ஒரே தளத்தில் சேமிக்கவும், அவர்களின் உடல்நலப் பதிவுகளை எந்த நேரத்திலும் எங்கிருந்தும் கவலையின்றி அணுகவும் அல்லது பகிரவும் உதவும். தரவு பரிமாற்றத்தின் இந்த டிஜிட்டல் மயமாக்கல், சிறந்த மருத்துவ முடிவெடுப்பதையும் கவனிப்பின் தொடர்ச்சியையும் உறுதி செய்யும் என தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1827816
***************
(Release ID: 1827898)
Visitor Counter : 300