வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
நிதியாண்டு 21-22-ல் 83.57 பில்லியன் அமெரிக்கன் டாலர் என்ற அளவுக்கு மிக அதிகமான வருடாந்தர வெளிநாட்டு நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது
Posted On:
20 MAY 2022 4:19PM by PIB Chennai
நிதியாண்டு 21-22-ல் 83.57 பில்லியன் அமெரிக்கன் டாலர் என்ற அளவுக்கு மிக அதிகமான வருடாந்தர வெளிநாட்டு நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது. இது 2014- 2015 ல் வெறும் 45.15 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. உக்ரைனில் ராணுவ நடவடிக்கை, கொவிட்-19 பெருந்தொற்று ஆகியவை இருந்தபோதும், 2020-21ஐ விட வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவு 1.60 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகமாக வரப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
பொருள் உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தத் துறையில் 2020-21 நிதியாண்டுடன் (12.09 பில்லியன் அமெரிக்க டாலர்) ஒப்பிடுகையில், 2021-22 நிதியாண்டில் 76 சதவீத உயர்வு (21.34 பில்லியன் அமெரிக்க டாலர்) இருந்தது.
இந்தியாவில் கொவிடுக்கு முந்தைய காலத்தில் ( 2018 பிப்ரவரி முதல் 2020 பிப்ரவரி வரை) 141.10 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவு கொவிடுக்கு பிந்தைய காலத்தில் (2020 மார்ச் முதல் 2022 மார்ச் வரை) 23 சதவீதம் அதிகரித்து 171.84 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவில் 2021-22 நிதியாண்டில் முதன்மை நாடாக 27 சதவீதத்துடன் சிங்கப்பூரும், 18 சதவீதத்துடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், 16 சதவீதத்துடன் மொரீஷியஸ் மூன்றாவது இடத்திலும் இருந்தன.
***************
(Release ID: 1826970)
Visitor Counter : 387